உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை யிலும் அவன் அருள் மணத்தைக் காணலாம். சிறிய காரியங் களிலும் கூட அவன் திருவருளால் நலம் உண்டாயிற்று என்பதை உணர்ந்தால் பெரிய காரியங்களில் அவன் திருவருள் துணை செய்வதைக் காணலாம். இப்போது இறைவனுடைய திருவருளால் கந்தபுராண விரிவுரையைத் தொடங்கப்போகிறேன். மூன்று புராணங்கள் FALL புராணங்கள் பல வகை. மகாபுராணங்கள் பதினெட்டு; உப புராணங்கள் பதினெட்டு. இவை அல்லாமல் பல தலபுராணங்கள் உள்ளன. பொதுவாகச் சைவர்கள் மூன்று புராணங்களைச் சிறப்பாகச் சொல்வார்கள்.(சிவபெருமானுக்கு மூன்று கண்கள் இருப்பது போல அந்த மூன்று புராணங்களும் நமக்கு விளக்கத்தைத் தருவனவாக அமைந்துள்ளன. அந்த மூன்று புராணங்களில் ஒன்று கந்தபுராணம்; இரண்டாவது பெரியபுராணம்; மூன்றாவது திருவிளை யாடல் புராணம், திருவிளையாடல் புராணம் எம்பெருமான் மதுரை ரநகரில் இயற்றிய அருள் திருவிளையாடலைச் சொல்கிறது. அது தலபுராணம். பெரியபுராணம் என்பது தொண்டர்களுடைய சரித்திரத்தைச் சொல்வது. அது தமிழில் முதல் முதலாக உண்டா னது. கந்தபுராணம் முருகப்பெருமானின் பெருமையைச் சொல்வது; மகாபுராணங்கள் பதினெட்டில் ஒன்று, இது லட்சம் கிரந்தங்கள் அமைந்தது.] இலக்கியங்களின் வகை இலக்கியங்களைச் சில வகையாகப் பிரித்திருக்கிறார்கள். பெரியவர்கள். பிரபு சம்மிதை என்பது ஒன்று; தலைவனுடைய கட்டளையைப் போன்றது. வேதத்தைப் பிரபு சம்மிதை என்று சொல்வார்கள். இதைச் செய்க, இதைச் செய்யற்க என்று வேதம் சொல்லும்; விதி ேெஷகங்களைச் சொல்வது வேதம். எசமானன் இதைச் செய்ய வேண்டுமென்று சொன்னால், "எதற்காகச் செய்ய வேண்டும்? அதைச் செய்வதனால் என்ன பலன்?" என்று கேட்பதற்குத் தொண்டனுக்கு உரிமையில்லை. "இதைச் செய்யக் கூடாது" என்று சொன்னாலும், 'எதற்காக, என்ன காரணம்? என்று கேட்க இயலாது. எசமானன் இட்ட கட்டளையைக் கேள்வி கேட்காமல் செய்வது பணியாள் கடமை. எசமானன் கட்டளையைப்