உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் செந்தூர் வருதல் 209 ளது வாழ்வு அமைந்திருந்தது. கோவில்கள் மிகப் பழங்காலத்தில் இன்றைக்குள்ள முறையில் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஏதோ ஒரு வடிவில் கோயில்கள் இருந்திருக்கின்றன. பிற்காலத்து வந்த மன்னர்கள் அவற்றை விரிவுபடுத்தி நல்ல முறையில் வழிபாடு நடைபெற வகை செய்தார்கள். கோவில் இல்லாத ஊரை ஊராக எண்ணுவதில்லை. அப்பர் சுவாமிகள் சொல்கிறார்; கோவில் இல்லாத ஊரைக் காடு என்று சொல்கிறார். காடு என்றாலும் முனிவர் கள் இருப்பார்கள் அல்லவா? முனிவர்கள் இல்லாமல் வெறும் விலங் குகள் மட்டும் உள்ள இடத்திற்கு அடவி என்று பெயர். திருக் கோவில் இல்லாத இடத்தை, "அடவி காடே" என்கிறார் திருத்தாண் டகத்தில். காடு என்றாலும் அடவி என்றாலும் ஒன்றுதான். அடவி என்று சொன்னதனாலே ஒரு குறிப்பு இருக்கிறது. அங்கே உள்ளவர் கள் விலங்குக்குச் சமானம் என்ற பொருள் தொனிக்கிறது. அதனால் தான், 'கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்ற பழமொழி தோன்றியது. இப்போது சினிமா இல்லாத ஊரில் சேர்ந்திருக்க வேண்டாம் என்ற புதுமொழி உண்டாகியிருக்கிறது. கோ என்றால் அரசனுக்குப் பெயர் : தலைவனுக்கும் பெயர். கோவில் என்பது பெரிய தலைவனும், அரசனும் ஆகிய சிவபெருமா னுடைய இடத்திற்குப் பெயர். சிவராஜா, ரங்கராஜா என்று சிவ பெருமானையும், திருமாலையும் சொல்வது வழக்கம். அந்த அரசர்கள் ஆளுகிற ஆட்சி என்றும் நிலையாக இருப்பது. கல்லின் தலையில் பாலை ஊற்றுகிறார்களே என்று சிலர் சொல் கிறார்கள். அன்னாபிஷேகம் என்று சொல்லிச் சோற்றை வீணடிக்கிறார் களே என்று சிலர் வாதிடுகிறார்கள். இந்தப் பழக்கம் எல்லாம் பழங்காலத்தில் தோன்றியவை. அந்தக் காலத்தில் பாலும்,சோறும் மிகுதியாகக் கிடைத்தன. மிஞ்சிப் போவதனால்,'எதற்காக இவ் வளவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும்?' என்ற எண்ணச் சோர்வு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மிகுநியான எல்லாவற்றையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கச் செய்தார்கள். இதை விட உயர்ந்த பயன் என்ன இருக்கிறது? 'இன்னும் அதிகமாக அந்த வளத்தைப் பெருக்க வேண்டும்' என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டாவதற்கு இந்தப் பழக்கங்களை எல்லாம் ஏற்படுத்தினார்கள். சில காலத்திற்கு 27