உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 கந்தவேள் கதையமுதம் சூரபன்மன் யாககுண்டத்திலிருந்து எழுந்து வந்தான். அப்போது சிவபெருமான் இடபாரூடனாக எழுந்தருளி அவர்களுக்கு அனுக்கிரகம் பண்ணினான். நீ சூரனுடைய வழிபாட்டை ஏற்றுக் கொண்டு சிவபெருமான் அவனுக்கு வரம் கொடுக்கலானான். ஆயிரம் கோடி அண்டங்கள் இருக்கின்றன. அவற்றில் 108 கோடி அண்டங்களுக்கு நீ அரசனாய் இருப்பாய். 108 யுகங்கள் நீ அரசாள்வாய். இந்த அண்டங்களுக்கெல்லாம் நீ நினைத்தவுடன் போவதற்கு உனக்கு ஓர் இந்திரஜாலத் தேர் தருகிறேன். அந்தத் தேர் வாயுவேகத்தோடு போகும்" என்று அனுக்கிரகம் பண்ணினான். அதற்குமேலே, யாராலும் எகிர்த்துப் போரிடுவதற்கு அரிய சக்கராயுதத்தையும் கொடுத்தான்; அவன் ஊர்வகற்குரிய சிங்க வாகனத்தையும் வழங்கினான். மண்தனக்கா யிரகோடி. ஆண்டங்கள் உ உள ஆகும்; மற்ற வற்றுள் ஆண்டமோ ராயிரத்தெட்டுகம்நூற்றெட் டான்கஎன அருளால் நல்கி எண்தொகைபெற் றிடுகின்ற அவ்வண்டப் பரப்பெங்கும் ஏகும் வண்ணம் திண்டிறல்பெற் றிடுகின்ற இந்திரஞா லமதென்னும் தேரும் நல்கி; எண்ணுபல புவனங்கள் கொண்டஅண்டத் தொகைதன்னை என்றும் போற்றக் கண்ணனது நேமியினும் வலிபெறுமோர் அடலாழி கடிதின் நல் அண்ணலுறு சினவேற்றுக் கோளரிஊர் தியும்நல்கி அகிலத் துள்ள விண்ணவர்கள் யாவருக்கும் அன்றுமுதல் முதல்வனாம் மேன்மை நல்கி (வரம்பெறு.31,22. அண்ணல் (நேமி-சக்கராயுதம். ஆழி - சக்கரம். கடிதின் - விரைவில், பெருமை. ஏற்றுக்கோளறி ஊர்தி - ஆண்சிங்க வாகனம்.] 18 தேவர்கள் யாவரும் தொழுவதற்கு ஏற்ற வகையில் நீங்கள் மூன்று பேரும் இருந்து அரசாளுங்கள்" என்று சிவபெருமான் அருளினான்