சூரபன்மன் ஆட 243 சூரபன்மன் தன் ஆட்சியை நடத்திக்கொண்டு வந்தான். தன் தம்பிமார்கள் அங்கங்கே அரசு செய்ய, சூரபன்மன் எல்லோருக்கும் மேலான பேரரசாகச் சிங்காதனத்தில் வீற்றிருந்து அதிகாரத்தை நடத்திக் கொண்டிருந்தான். சூரன் அரசாட்சி அப்போது அவனுடைய ஆட்சியில் அசுரர்கள் மட்டுமின்றித் தேவர்களும் அடங்கியிருந்தார்கள். தேவர்கள் என்ன என்ன பொருள்களை இதுவரை அநுபவித்து வந்தார்களோ அவற்றை எல்லாம் அவன் இப்போது அநுபவிக்கத் தொடங்கினான். தேவர் களைப் பார்த்து, "நீங்கள் எல்லோரும் என்னுடைய உணவுக்குக் கடலிலிருந்து மீனைப் பிடித்துச் சுமந்து வாருங்கள் " என்றான். ஊனமுற்றோர் போல் இவ்வா றுலைகின்ற காலத்தில் ஒருநாட் சூரன் வானகத்துத் தலைவனையும் அமரரையும் வருகவெனா வலித்துக் கூவித் தானவர்க்குத் தம்பியர்நீர், அவர்பணிதும் பணியன்றோ ? தரங்க வேலை மீனனைத்தும் சூறைகொண்டு வைகலும்உய்த் திடுதிரென விளம்பி னானால். (தேவரை ஏவல் கொள்.3. (ஊனம் உற்றோர் - அங்கவீனம் அடைந்தவர்கள். உலைகின்ற - வருந்துகின்ற, வலித்து - வற்புறுத்தி குறை கொண்டு -கொள்ளை கொண்டு. தோறும், உய்த்திடுதிர் - போடுங்கள்.] வைகலும் - நாள் இந்த உத்தரவைக் கேட்டு இந்திராதி தேவர்கள் வருந்தினார் கள் : ரும் நிலை இவ்வளவு மோசமாகப் போய்விட்டதே!' என்று எண்ணிப் புலம்பினார்கள். அப்போது இந்திரன் வருணனை அழைத்து, "நீதான் மீன்களைக் கொண்டுவர வேண்டும்" என்று கூறினான்;'உனக்குத்தானே கடல் சொந்தம் ? மீன்களைக் கொண்டு வந்து ஓரிடத்தில் குவித்து வை. மீன் பிடிக்கிற இழிந்த காரிய மாவது எங்களுக்கு இல்லாமல் போகட்டும்" என்று இந்திரன் கேட்டுக்கொண்டான். அப்படியே வருணன் கடலிலிருந்து மீன் களைக் கரையில் கொண்டு வந்து கொட்ட, தேவர்கள் நாள்தோறும் மீன்களைச் சுமந்துவந்து சூரனது மடைப்பள்ளியில் போட, இந்திரன் அவர்களுக்கு மேஸ்திரியாக இருந்தான்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/263
Appearance