உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூரபன்மன் ஆட்சி 245 தொட்டிலில் படுத்திருக்கின்றபோதே உலக விளக்காகிய சூரியனைப் பிடித்துவந்தால், பெரியவனானால் என்ன கொடுமை பண்ணுவான் ! உலகத்திற்கு ஒளி தருகின்றவனை அடக்குகின்ற பொல்லாதவன் அவன். ஒளி மயமான மேனி உடையவர்கள் தேவர்கள். அவர்கள் போகிற இடங்களில் ஒளி பரவும். இருளுக்கு எதிரி ஒளி. சூரியனைப் பிடித்துக் கொண்டுவந்து தன் தொட்டிலில் கட்டிவிட்டான் சூரனு டைய பிள்ளை. அதனால் அவனுக்குப் பானுகோபன் என்ற பெயர் ஏற்பட்டது. இயற்பெயர் இன்னதென்று தெரியவில்லை. சூரியனை விடுதலை செய்து போகப் பிரமன் சூரனிடம் சென்று வேண்டினான். சூரன் பிரமதேவனை, சூரன் பிரமதேவனை, "என் பிள்ளையாண்டானிடம் போய்ச் சொல்லுங்கள்" என்று அனுப்பிவிட்டான். பின்னர்ப் பிரமன் சின்னஞ்சிறு குழந்தையாகிய பானுகோபனிடம் வந்து வணங்கி நின்றான். பொல்லாத காலம் வந்தால் எவ்வளவு பெரியவர் ஆனாலும் இழிந்த நிலையை அடைவார்கள். பிரமன் தன்முன்னே பல்லைக் காட்டிக் கொண்டு வந்து நின்றபோது, பானுகோபன் பார்த்து, உனக்கு என்ன ஐயா வேண்டும்?" என்று கேட்டான். "சூரியனைத் தாங்கள் சிறையிலிருந்தும் விடுவிக்கவேண்டும்" என்று கேட்டுக் கொண்டான் பிரமன். IP அப்போது பானுகோபன் பேரம் பேச ஆரம்பித்துவிட்டான். "நான் சும்மா விடுவேனுா? எனக்கு என்ன தருவாய்?" என்று கேட்டான்: "பிரம்மாஸ்திரத்தைத் தருகிறாயா? விடுகிறேன் என்றான். காரியம் ஆகவேண்டுமானால் கழுதையின் காலையும் பிடித்துத்தான் ஆகவேண்டும் என்பார்கள். சூரியன் இல்லாவிட் டால் உலகம் இருளில் ஆழ்ந்துவிடுமே, எங்கும் இருள் மண்டிப் போகுமே என்று அஞ்சி, நான்முகன் பானுகோபன் சொன்னபடி பிரம்மாஸ்திரத்தைக் கொடுத்தான். பானுகோபன் சூரியனை விடுதலை செய்தான். சொன்ன சொற்படி சூரியனைப் பானுகோபன் விடுதலை செய்தவுடன் பிரமனுக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. வியாபாரத்தில் வியாபாரி சொன்ன பணத்தைக் கொடுத்துவிட்டால், அவன் கொஞ்சம் கொசுறு போடுவான்; அளவுக்கு மேலும் கொஞ்சம் கொடுப்பான். அதுபோலப் பிரமன் மகிழ்ந்து மோகாஸ்தி ரத்தையும் கொடுத்தான். முதலில் கொடுத்தது வியாபாரம்.