8 100 கந்தவேள் கதையமுதம் அவற்றைப் பார்த்தால் கதைகளாக இருந்தாலும் அவற்றினூடே உள்ளுறையாக வாழ்க்கையில் கடைப்பிடிக்கவேண்டிய உண்மை புதைந்து இருக்கும். இறைவன் செய்கின்ற காரியங்களை எல்லாம் திருவிளையாடல் என்று சொல்வார்கள். முருகப்பெருமானுடைய பலவகைத் திருவிளை யாடல்களைச் சொல்வது கந்தபுராணம். இறைவன் செய்பவை எல்லாமே திருவிளையாடலாகும். சிவபெருமான் மதுரையில் செய்த செயல்களை எல்லாம் திருவிளையாடல்களாக வைத்துத் திருவிளை யாடல் புராணம் சொல்கிறது. விளையாட்டுக்கும் விளையாட்டுக்கும் வேறுபாடு உண்டு. விளையாட்டு இன்பத்தைத் தருவது. வினையாட்டு, துன்பத்தைத் தருவது. ஒருவன் மண்வெட்டியினால் வெட்டுகிறான். அவன் உடம்பு வேர்க்கிறது. உடம்பில் வருத்தம் தோன்றுகிறது. ஒருவன் கிரிக்கெட் விளையாடுகிறான். அப்போது அவனும் கையையும், காலையும் ஆட்டுகிறான். அவன் உடம்பெல்லாம் வேர்வை வருகிறது. ஆனால் அவனுக்குத் துன்பம் உண்டாவதில்லை. வேலை செய்கிறவன் மண்ணை வெட்டி எடுத்துக் கொட்டுகிறான். அந்த வேலையைச் செய்யும்போது, எப்போது வேலை முடியும்? எப்போது கூலிவாங்கிப் போவோம்?" என்ற எண்ணத்தோடே செய்கிறான். அவனுக்கு அந்த வேலை சிரமமாகத் தெரிகிறது. விளையாட்டு வீரனோ அதற்கப்பால் ஒரு பயன் இருக்கிறது என்பதை எண்ணாமல் அதிலேயே ஈடுபட்டிருக் கிறான். அதனால் இன்பத்தை அடைகிறான். விளையாட்டைச் செய்கிற வனுக்கும் இன்பம் ; அதைப் பார்க்கிறவனுக்கும் இன்பம். ஆண்டவன் செய்கிற திருவிளையாடல் அவனுக்கும் இன்பம்; அதைப் பார்க்கிற வர்கள் எல்லோருக்கும் மிகமிக இன்பம். புராணங்கள் பதினெட்டு என்று சொன்னேன். வேதத்தி லுள்ள கருத்துக்களை அறிவுறுத்துவதற்காக அமைந்தவை புராணம்; அவற்றை உபப்பிரும்மணம் என்று சொல்வார்கள். மகாபுராணங்கள் பதினெட்டுள் சிவபரத்துவத்தைச் சொல்வன பத்துப்புராணங்கள். திருமாலின் சிறப்பைச் சொல்வன நான்கு. பிரம்மாவைப் பெருமைப்படுத்துகிற புராணங்கள் இரண்டு. சூரிய னுக்குரியது ஒன்று. அக்கினிக்குரியது ஒன்று.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/27
Appearance