உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தியர் அருஞ்செயல்கள் 255 எண்ணினான். உடன் அந்த மலையில் குகைபோல ஒரு வழியைத் தோன்றச் செய்தான். அந்த வழியில் அகத்தியர் புகுந்தார். அந்த வழி கொஞ்ச தூரம் போனவுடன் நின்றது. வேறு ஒரு வழி தோன்றியது. அந்த வழியில் போனார். அதுவும் நின்றுவிட்டது. வெளியில் போகவும் வழி தெரியவில்லை. அப்போது புகையும், மழையும், சூறைக்காற்றும், நெருப்பும் வந்தன. அதைக் கண்டு அகத்தியருக்குக் கோபம் வந்தது. "யாரோ அசுரன் இந்த மாயத்தைச் செய்கிறான். இவனுடைய பலத்தை நான் இப்போதே அழித்துவிடுகிறேன்' என்று தம் கைத்தண்டத்தினால் பல இடங் களைக் குத்தினார். அப்படிக் குத்திய இடங்களில் துவாரங்கள் உண்டாயின. நன்றுநன் றவுணன் கொல்லாம் நமக்கிது புரியும் நீரான்; இன்றிவன் வன்மை நீப்பன் யானென,அவுண வெய்யோன் குன்றுரு வதனில் குற்றிக் குறுமுனி பாணித் தண்டால் துன்றிரும் பூழை ஆக்கிச் சூள்இவை புகல லுற்றன். (கிரவுஞ்சப், 10.) [அவுணன் அசுரன். சீரான் - இயல்புடையவன். குற்றி -குத்தி, பாணித் தண்டால்-கையிலிருந்த தண்டத்தினால். பூழை - துளை. சூள்-சாபம்.] உடனே கிரௌஞ்ச கிரியைப் பார்த்து ஒரு சாபமிட்டார். "ஏ அசுரனே, நீ மதி படைத்தவன் தான். மாட்சியுள்ள மதி படைத்தவன் அல்ல" என்று தொடங்கினார். 'மாண்மதி பெருத வெய்யோய்' என்று கூறி மேலே சொன்னார். மாண்மதி பெழுத வெய்யோய், மற்றுதின் தொன்மை நீங்கி நீள்மலை ஆகி ஈண்டே தின்றுதீ அவுணர்க் கெல்லாம் ஏண்மிகும் இருக்கை யாகி, இருத்தவத் தோர்க்கும் ஏனைச் சேண்மலி கடவு ளோர்க்கும் தீத்தொழில் இழைத்தி பன்னாள். (கிரவுஞ்சம்.11.) வெய்யோய் கொடியவனே. ஏண் - பெருமை. இருக்கை வாழ்விடம். சேண் -வானுலகம். கடவுளோர் - தேவர்.] க உலகில் அணுக்குண்டு செய்கிற விஞ்ஞானிகள் அறிவாற்றல் பெற்றவர்களே. ஆனால் அவர்கள் அறிவு உலகத்திற்கு நன்மை செய்வதில்லை. அவர்கள் மாண்மதி பெறாதவர்கள். இங்கே கிரௌஞ்சாசுரன் தனக்குரிய சிறப்பான ஆற்றலைப் பிறருக்குத் துன்பம் செய்வதற்குப் பயன் படுத்தினான். ஆகையால் மாண்மதி