உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 கந்தவேள் கதையமுதம் அடிகள்நீர் போத இந்நாள் அருந்தவம் புரிந்தேன்; இன்று முடிவுற வந்தீர்; யானும் முனிவர்தம் நிலைமை பெற்றேன்; கொடியனேன் இருக்கை ஈதால்; குறுகுதிர் புனித கமாகும் படிஎன உரைத்துப் பின்னும் பணிந்தனன் பதங்கள் தம்மை. (வில்வலன் வாதாவி. 5.) (அடிகள் -சுவாமிகள். குறுகுதிர் - வாருங்கள்.) வில்வலன் கூறிய, "அடிகள்நீர் போத இந்நாள் அருந்தவம் புரிந்தேன்; இன்று முடிவுற வந்தீர்" என்ற வார்த்தையில் குறிப்பாகச் சில செய்திகள் கிடைக்கின்றன. "இன்று முடிவுற வந்தீர்" என்று சொல்கிறான். அதற்கு, "என் தவம் பயனைப்பெற வந்தீர்கள்" என்று ஒரு பொருள். அவன் மனத்துக்குள் நினைத்தது, " உமக்கு முடிவாகும்" என்பது. ஆனால் அதற்குள்ளே, "நாங்கள் முடிவுறும்படி நீங்கள் வந்தீர்கள்" என்ற குறிப்பும் தொனிக்கிறது. கொடியனேன் என்று தன் நிலைமையையும் புலப்படுத்துகிறான். இவ்வாறு அகத்தியரை உபசாரம் பண்ணி பண்ணி அழைத்துக் கொண்டுபோய், வழக்கம்போல அவருக்கு வாதாபியாகிய ஆட்டை அடித்து இறைச்சி உணவை அளித்தான். அகத்தியர் அதைச் சாப்பிட்டவுடன், வில்வலன் எப்போதும் போல, "வாதாபி ! " என்று அழைத்தான். "இன்று முடிவுற வந்தீர்" என்பதற்கு, 'நாங்கள் முடிவுற என்று பொருள் கொள்ளும்படி ஆகிவிட்டது. வில்வலன் } அழைக்கவும் வாதாபி வெளிவரவில்லை. ஆடாக மாறி அகத்தியர் வயிற்றுக்குள்ளேயே இருந்தான்; உள்ளே இருந்து துள்ளினான். எண்ணாம லேமுன்பு கடலுண்ட தேபோல எனதூனும் உண்ட கொடி டியோன் உண்ணாடும் உயிர்கொண்டு வலிகொண்டு குறிதான உதரம் கிழித்து வருவன் அண்ணாவில் வலனே எனக்கூ; றி யேதம்பி அரிபோல் மூழங்கி யிடலும். மண்ணாடர் புகழ்கும்ப முனிதீயர் செய்திட்ட மாயம்தெரிந்துவெ குள்வான். (வில்வலன் வாதாலி.30) [எண்ணாமலே - நான் இன்னது செய்வேன் என்று எண்ணாமல்,கொடியோன் அகத்தியன்.வலிகொண்டு - பலத்தைக்கொண்டு, அரியோல் - சிங்கத்தைப்போல.]