உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை சுந்தபுராணம் கந்தபுராணம் ஆறு சம்மிதைகள் அடங்கியது; ஐம்பது கண்டங்களை உடையது. சனத்குமார சம்மிதை, ரூத சம்மிதை, பிரம்ம சம்பிதை, விஷ்ணு சம்மிதை, சங்கர சம்மிதை, சூர சம்மிதை என்பவை ஆறு சம்மிதைகள், சங்கர சம்மிதையில் முப்பதாயிரம் சுலோகங்களும் பன்னிரண்டு கண்டங்களும் இருக் கின்றன. அவற்றுள் முதன்மையானது சிவரகசிய கண்டம். அது பதின்மூவாயிரம் சுலோகங்களை உடையது. உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தக்ஷ காண்டம், உபதேச காண்டம் என்று ஏழு காண்டங்கள் சிவ ரகசிய கண்டத்தில் உள்ளன. கந்தபுராணம் வடமொழியில் ஸ்காந்தம் என்று சொல்லப் பெறும். கந்தபுராணத்தில் எல்லாத் தெய்வங்களைப் பற்றிய செய்தி களும் வருகின்றன. கந்தபுராணத்தில் இல்லாத பொருள் இல்லை. எந்தப் பொருளும் கந்தபுராணத்தில்' என்று பழமொழி உண்டு. அதிலிருந்து கந்தபுராணம் பலவகையான பொருளைத் தன்னுள்ளே அடக்கியது என்பது விளங்கும். அந்தப் பழமொழியை மாற்றிச் சொல்கிறார்கள். ‘எந்தப் புளுகும் கந்தபுராணத்தில்' என்கிறார்கள். நல்லவற்றை எல்லாம் பொல்லாதவையாக்குவது வழக்கமாகிவிட்டது. ஆகவே பொருள் என்பது புளுகாகிவிட்டது. தமிழ்க் கந்தபுராணத்தைப் பாடியவர் கச்சியப்ப சிவாசாரியார். அவரே, 'இந்தப் புராணத்தில் இல்லாதது ஒன்றும் இல்லை' என்று ஒரு பாட்டில் சொல்கிறார். என்கிறார். புதுமயி லூர்பரன் பூராணத் துற்றிடாக் கதையிலை அன்னது கணித மின்றரோ அவையடக்கம்,13) வடமொழியில் உள்ள கந்தபுராணத்தில் பதின் மூவாயிரம் சுலோகங்கள் உள்ளன. கச்சியப்ப சிவாசாரியார் அதை 11,345 பாடல்களில் பாடியுள்ளார். ஒவ்வொரு பாட்டையும் ஆழமாகப் பார்த்துப் பொருள் செய்வதானால் ஒரு மகாமகம் ஆகும். செய்தித் 2 0