உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 கந்தவேள் கதையமுதம் அப்பர் சுவாமிகள் அந்த வழியே போகும்போது தம்முடைய பெயர் இருப்பதைக் கண்டு, அப்படி வைத்திருப்பவர் யார் என்று விசாரித் தார். திங்களூரில் இருக்கும் அப்பூதி அடிகள் என்று சொன்னார்கள். உடனே அவரைப் பார்க்கத் திங்களூர் சென்றார். அவரைக் கண்டு, உங்கள் பெயரைத் தண்ணீர்ப் பந்தலுக்கு வைக்காமல் வேறு ஒருவர் பெயரை வைத்திருக்கிறீர்களே! ஏன்?" என்று கேட்டார். அப்பூதி அடிகளுக்குக் கோபம் வந்தது. அவர் மிகவும் பண்பாடு ஆகையால் மிக்க வன்மையான சொல்லைச் சொல்ல உடையவர். வில்லை. நன்று அருளிச் செய்திலீர்" என்று அவர் சொன்னதாகச் சேக்கிழார் பாடுகிறார். "பொல்லாத வார்த்தைகளைச் சொல்கிறீரே" என்று சொல்லவில்லை அதைப் போல இந்திராணி, நின்கிளை, உய்ந்தி டத்தரும் உரைய தன்றிதே என்று சொன்னாள். அசமுகி கைவெட்டுப் படல் உடனே அசமுகி இந்திராணியின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு ஓடினாள். அப்போது இந்திராணி ஐயோ என்று ஓலமிட் டாள்; அரற்றினாள். அந்த ஓலத்தைக் கேட்டு மகாகாளன் வந்தான். திடீரென்று வந்த அந்த வீரன், இந்திராணியைப் பார்த்து, "தாயே, நீ சிறிதும் வருந்த வேண்டாம். அசமுகி என்ற கொடியவளுக்குச் சிறிதும் அஞ்சாதே. உன்னைத் தொட்டு இழுத்த கையை வெட்டி உன்னை விரைவில் விடுவிக்கிறேன் பார்" என்று சொல்லி அங்கே வந்தான். கொம்மென வந்த வீரன் கூவிய சசியை நோக்கி, அம்மனை, அழுங்கல் வாழி: அசமுகி என்னும் வெய்யாட்டு இம்மியின் துணையும் அஞ்சேல்; ஈண்டுணைத் தீண்டு கின்ற கைம்முறை தடிந்து வல்லே விடுவிப்பன் காண்டி என்ருன். (மகாகாளர் வரு . 6. ) (கொம்மௌ - விரைவில். சசி - இந்திராணி. அம்மனை - தாயே. அழுங்கள்- வருந்தாதே.வல்லே - விரைவில். காண்டி -பார்.]