உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 கந்தவேள் கதையமுதம் நாடகம் நடக்கிறது. அரசி அரசனுக்குப் பால் கொடுக்கிறாள். நாடகத்தில் பால் கொடுக்கிற காட்சி வரும்போது சுண்ணாம்பு நீரையா கொடுப்பார்கள்? ஒரு வெள்ளித் தம்ளரில் பாலையே கொடுக் கிறார்கள். அதைக் குடிக்கிறான் அரசன். நாடகம் முடிந்த பிறகு, அரசனாக வேஷம் போட்ட பலசரக்குக் கடைக் குப்புசாமி, தன் தலைமேல் இருந்த கிரீடம், இடையில் செருகியிருந்த வாள், அரசனுக் குரிய ஆடையாபரணங்கள் அனைத்தையும் களைந்தெறிகிறான். என்றாலும் அரசனாக வேஷம் போட்டபோது அவன் குடித்த பாலை என்ன செய்ய முடியும்? அது உள்ளுக்குள் போனது போனது தானே? அதை நிக்கமுடியுமா?அப்படி, எல்லாம் பொய்யாக க இருந்தாலும் அழுதால் அது உண்மையாகும். அதைத்தான் மாணிக்கவாசகர் சொல்கிறார். இராமகிருஷ்ணர் வாக்கு இராமகிருஷ்ண பரமஹம்சர் இறைவனைக் கண்டவர். அந்தக் காலத்தில் விவேகானந்தராகிய நரேந்திரர் எல்லா நூல்களையும் படித்தறிந்தவராக இருந்தார். அவர் படிக்காத தத்துவ நூல் எதுவும் இல்லை. எந்தச் சந்நியாசியைக் கண்டாலும், "நீர் கடவுளைக் கண்டிருக்கிறீரா?" என்று கேட்பார். தாகூரின் தந்தையாராகிய தேவேந்திரநாத் தாகூர் கங்கையில் ஒரு படகில் தங்கித் தவம் செய்துகொண்டிருந்தார். அவரிடம் போய், " நீங்கள் இறைவனைக் கண்டீர்களா?" என்று கேட்டார். அவர் பதில் சொல்லாமல் தட்டிக் கொடுத்து, "நீ மிகவும் சிறப்பாக வாழ்வாய்" என்று சொல்லி அனுப்பிவிட்டார். கடைசியில் இராமகிருஷ்ண பரமஹம்சரைப் பார்த்தபோதும் அவர் கேட்ட கேள்வி, "நீங்கள் கடவுளைக் கண்டீர் களா?" என்பதுதான். இராமகிருஷ்ணர், "நான் கடவுளைக் கண்டிருக்கிறேன்" என்று பதில் சொல்வார் என்று எதிர்பார்த்தார். அவர் அதற்குமேலே சொன்னார்; "நான் காட்டுவேன்" என்று கூறினார். அதோடு விட்டுவிடவில்லை. "இந்த உலகத்தில் வேலை வேண்டும், பிள்ளை வேண்டும் என்றெல்லாம் கேட்கிறார்களே யொழியக் கடவுளைப் பற்றிக் கேட்பவர் யாரும் இல்லை.நீ கேட் கிறாயே; நீ அழு. அழுதால் அவனைக் காணலாம்" என்று சொன்னார். வைகைக் கரையில் இருந்த மாணிக்கவாசகரும் இதைத்தான்