334 கந்தவேள் கதையமுதம் கழுத்தில் ஏற்றுக்கொண்டான். சந்திரனைக் காப்பாற்றுவதற்காக அவனைத் தன் சடாமகுடத்தில் ஏற்றுக் கொண்டான். இப்படியெல் லாம் தன்னைச் சரணடைந்தவர்களைக் காப்பவன் சிவன் என்பதை நினைந்து அரற்றினான் சயந்தன். “ அடியார்கள் வேண்டும் எல்லா வற்றையும் வேண்டியவாறு அருள் செய்யும் பெருமானாயிற்றே ! எங்கள் உயிருக்கு உயிராய் இருக்கிற பெருமானே, இதைப் பார்க்கவில்லையா? இது உனக்குத் தெரியாதா? என்று அரற்றினான். நீக்கி "உயிர்களை எல்லாம் பாசத்திற்குள் அகப்படுத்திப் பிறவிகளைத் தருவோனும், மறுபடியும் பாசத்தை அருளுகிறவனும் ஆண்டவன் என்று வேதம் சொல்கிறது. நாங்கள் உங்களுக்கு இழைத்த குற்றத்திற்கு இந்தத் தண்டனை போதும். நீதான் இனி அருள் செய்யவேண்டும்" என்று வருந்தினான் சயந்தன். பாசங்கொண்டு ஆவி பலவும் பிணிப்போனும் நேசம்கொண்டு ஆங்கதனை நீக்கியருள் செய்வோனும் ஈசன் சிவனென்று இயம்பும்மறை ; நீஇழைத்த ஆசுஒன்றும் இத்தீமை ஆர்தவிர்க்க வல்லாரே? (சயந்தன் புலம்புறு. 61.} (ஆசு ஒன்றும் இத்தீமை - எங்கள் குற்றத்துக்காக எங்களை அடைந்த இந்தத் துன்பத்தை. ஆண்டவனை, பயகிருத், பயநாசனன் என்று சொல்வார்கள். பிறவி யைத் தருகிறவன் அவன் தான். ஆன்மாக்களுக்குப் பிறவியி லிருந்து விடுதலை தருகிறவனும் அவன்தான் பந்தமும் வீடும் படைப்போன் காண்க " என்று திருவாசகத்தில் வருகிறது. $ எம்பெருமானே, பக்தி உள்ளவர்களுக்கு நீ அருள் செய்கிறாய். பக்தி இல்லாதவர்களுக்கு அருள் செய்வதில்லை. நானோ சிறிதும் பக்தி இல்லாதவன். அதனால்தான் என்னைக் காப்பாற்றாமல் இருக் கிறாய் என்னிடத்தில் அருள் கூர்ந்து நன்மை செய்ய வேண்டுமென்று நான் நொந்து இங்கே அரற்றுவது என்னுடைய அறியாமைதான்' என்று நினைத்தான். இறைவன் அருள் இறைவன் எல்லோருக்கும் அருள் செய்ய வேண்டியவன். அப்படி இருக்க, சில அன்பர்களுக்கு மாத்திரந்தானே அருள்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/354
Appearance