உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரவாகுவின் வீரச் செயல்கள் 353 வெள்ளம் கரை புரண்டு ஓடியது. ஓடம் இல்லை. உடனே குரு நாதரின் பெயரைச் சொல்லிக் கொண்டு அந்த யமுனையின்மேல் நடந்து சென்றான் ; அக்கரையை அடைந்தவுடன் அவனுக்கே வியப்புத் தாங்கவில்லை. குருநாதரின் திருவடியில் வீழ்ந்து வணங்கி, "சுவாமி, உங்கள் கிருபையால் தவம் பலித்து விட்டது" என்றான். "என்னப்பா சொல்கிறாய்? சாப்படித் தவம் பலித்தது?" என்று அவர் கேட்டார். "நான் இப்போது தரையின்மேல் நடந்து வருவது போல யமுனையின்மேல் நடந்து வந்தேன்" என்றான். "ஐயோ ! உன் தவம் ஆறு பைசா மதிப்புடையது தானா? அரையணாக் கொடுத்தால் ஓடத்தில் ஓடக்காரன் அக்கரை கொண்டு போய் விடுகிறானே !" என்று பரிதாபப்பட்டாராம். " ஆகவே, சித்து என்பது ஞானத்திற்குப் புறம்பானது. தவத் தின் பயனாக அது இடையில் வந்து சேரும். அதைப் பெரிதாக நினைத்தால் தவம் குலைந்து போகும். சாப்பிட் ரமண பகவான் இதை நையாண்டியாகச் சொல்வார். டால் வெளிக்குப் போகும். வெளிக்குப் போக வேண்டும் என்பதற் காக யாராவது சாப்பிடுவார்களா? தவம் செய்தால் இடையில் சித்துகள் வந்து சேரும். ஆனால் சித்துக்காகத் தவம் செய்வது வறு. 45 "கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்; கரடிவெம் புலிவாயையும் கட்டலாம்; ஒருசிங்க முதுகின்மேல் கொள்ளலாம்; கட்செவி எடுத்தாட்டலாம்; வெந்தழலில் இரதம்வைத் தைந்துலோ கத்தையும் வேதித்து விற்றுண்ணலாம்; வேறெருவர் காணாமல் உலகத் துலாவலாம்; விண்ணவரை எவல்கொளலாம்; சந்ததமும் இளமையோ டிருக்கலாம், மற்றொரு சரீரத்தி லும்புகுதலாம்; சலமேல் நடக்கலாம், கனல்மேல் இருக்கலாம்; தன்றிகரில் சித்திபெறலாம்; சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது.