வீரவாகுவின் வீரச் செயல்கள் 355 கேட்டான். பேசும் போதே இந்திரன், பிரம்மா முதலியவர்களை மிகவும் துச்சமாகப் பேசினான். வீரவாகு தேவர் பேச்சு சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான், அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது" என்று தூதுவனுடைய இலக்கணத்தைத் திருவள்ளுவர் சொல்லி யிருக்கிறார். வீரவாகு தேவர் சிறந்த தூதுவராக வந்தவர். சூரன் யார் யார் தன்னைக் கண்டு அஞ்சுவார்கள் என்று சொன்னானோ அதையே அடியாகப் பிடித்துக் கொண்டு அவனிடம் பேசத் தொடங்கினார். சூரபன்மனே, நீ சொன்னாயே, இந்திரன், பிரமா, தேவர்கள் என்றெல்லாம்; அவர்கள் உன்னால் படுகிற துயரைப் போக்கவே திருச்செந்தூரில் வந்து படைவீடு அமைத்துக் கொண்டு தங்கி இருக்கிறான் என் தலைவன். அந்த முருகப் பெருமானின் அடியவன் நான்'. புரந்த ரன்குறை, அயன்முதல் அமரர்தம் புன்மை, வருந்தும் வானவர் சிறையெலாம் நிக்கி,மற்று அவர்தம் திருந்து தொல்இறை உதவுவான், செந்திமா நகர்வந்து இருந்த ஆதியம் பண்ணவன் அடியனேன் யானே. (அவை ரூ.94.) (புரந்தரன்-இந்திரன். புன்மை - துன்பம். தொல் இறை - பழைய பதவி.] . "நான் ஒருவன்தான் அடியவன் என்று எண்ணாதே. என்னைப் போல் லட்சத்து ஒன்பது பேர் அங்கே வந்திருக்கிறார்கள். அந்தப் பெரிய கூட்டத்தில் நான் ஒருவன் ; நந்திகணத்தைச் சேர்ந்தவன். என் பகைவர்கள் கூட என்னைப் புகழ்ந்து கொண்டு இருப்பார்கள். என் பெயர் வீரவாகு" என்றான். துன்னு தானைகட்கு அரசராய், அறுமுகத் தொல்லோன், பின்னர் வந்துளார் ஒன்பது லக்கமாம் பெயரால்; அன்ன வர்க்குனே, ஒருவன்யான் : நந்தியாங்கு அமர்ந்தேன் ; ஒன்ன லார்யுகழ் வீரவா கெனும்பெயர் உள்ளேன். (அவை புகு.95) [நந்திபாங்கு அமர்ந்தேன்- நந்தியின் பக்கத்தில் இருப்பவன். பகைவர்.] ஒன்னலார்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/375
Appearance