தேவாசுரப் போர் 371 அப்போது சூரன் மகனாகிய பானுகோபன் எழுந்தான்; "தார கனைக் கொன்றபோதே நீ என்னை விடவில்லை. இப்போதாவது என்னை அனுப்பினால் இரண்டாயிரம் வெள்ளம் சேனையையும், இந்திரன் பிரம்மா முதலியவர்களையும் அழித்து வெற்றியோடு வருவேன் " என்றான். ஆண்டெனை விடுத்தியேல் அமர தாற்றிட, மூண்டிடும் அவர்தொகை முருக்கித் தேவராய் ஈண்டுறு மோரையும் இமைப்பில் வென்றுபின் மீண்டிடு வேன்என விளம்சி னான்அரோ. (சூரன் அமைச்சியல். 35.) (அமரது: ஆற்றிட - போர் செய்ய. முருக்கி - அழித்து.] சிங்கமுகன் கூற்று அவன் பின்னர்ச் சூரன் தம்பி சிங்கமுகன் எழுந்தான். மாற்றானை நன்கு உணர்ந்தவன். எப்படி இராவணனுடைய தம்பி யாகிய கும்பகர்ணன் சீதையை விட்டுவிட வேண்டுமென்று எடுத்துச் சொன்னானோ அப்படிச் சிங்கமுகன் நல்லது எது என்று தெரிந்து எடுத்துச் சொன்னான். அறைகழல் வாசவற்கு அலக்கண் ஆற்றியே இறையினை அழித்தளை; இருந்த மாநகர் நிறைதரு வளன்எலாம் நிக்கு வித்தனை; சிறையிடை உய்ந்தனை தேவர் யாரையும். (சூரன் அமைச்சியல். 07.) [வாசவற்கு-இந்திரனுக்கு. அலக்கண் - துன்பம். இறையினை அரசை.] மற்றவர்கள் எல்லாம் சூரபன்மாவின் கோபம் மூரும் வகையில், அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும்" என்று சொன்னார்கள். ஆனால் இவன் மட்டும் சூரனுடைய தவறுகளை எடுத்துக் கூறினான். "நீ இந்திரனை நாட்டை விட்டு விரட்டினாய். அவனது காட்டிலுள்ள செல்வத்தை அழித்தாய். தேவர்களைச் சிறையில் அடைத்தாய். இவ்வளவு தவறு செய்தாயே; உன் தவறு களை நீ உணரவில்லையே!" பேறு தந்திடு பிஞ்ஞகன் பெருந்திரு வுடன்நீர் நூறு தன்னுடன் எட்டுகம் இரும்என துவன்றான்; கூறு கின்றதோர் காலமும் குறுகியது : அதனைத் தேறு கின்றிலை; விதிவலி யாவரே தீர்ந்தார் ? (சூரன் அமைச்சியல்.100.) (பேறு - வரம்-பிஞ்ஞகன் - சிவபெருமான், காலமும் - முடிவு கதவமும்.]
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/391
Appearance