தேவாசுரப் போர் 381 காலமும் இடமும் காலம், இடம் அவன் தான் என்று சொன்னான். காலம், இடம் ஆகிய இரண்டின் எல்லைக்குள் நாம் அகப்பட்டிருக்கிறோம். இறைவன் கால இட எல்லையைக் கடந்தவன். கடவுள் நம் கண்ணுக்குத் தெரிவ தில்லை. நம்மால் காண முடியவில்லை என்கிற காரணத்தினால் கடவுள் இல்லையென்று சொல்லலாமா? நாம் நாள் தோறும் பழகுகிற இடமும், காலமும் நமக்குத் தெரிகின்றன. ஆனால் அந்தக் காலம், இடம் ஆகியவை முழுமையும் நமக்குத் தெரிகிறதா? நாம் இருக்கிற இடம் நமக்குத் தெரிகிறது. இந்த இடம் உலகத்தில் இருக்கிறது. உலகம் பரந்து விரிந்து கிடக்கிறது. இந்த உலகத்தைப் போலப் பல அண்டங்கள் பந்து போலச் சுழலுகின்றன. 'இந்தப் பெருவெளியின் எல்லை எங்கே? இது எங்கே முடிகிறது?' என்று எண்ணிப் பார்த்தால் தலை சுழல் கிறது. இடம் எல்லையற்றது என்கிறார்கள். அப்படியே காலத்தை யும் எல்லையற்றது என்று சொல்கிறார்கள். நாம் இருக்கிற காலம் இன்ன வருடம், இன்ன மாதம், இன்ன தேதி, இன்ன நேரம் என்று தெளிவாகத் தெரிகிறது. ஆனால் இந்தக் காலம் எப்போது தொடங்கியது? நாம் 1979 என்று சொல்கிறோமே, இது கிறிஸ்து பிறந்த பின்னால். முன்னால் எவ்வளவு காலம் இருந்திருக்கும்? அது எப்போது தொடங்கியிருக்கும்? நமக்குத் தெரியாது. காலத்திற் குள்ளும், இடத்திற்குள்ளும் இருக்கிற நமக்கு இந்த இரண்டின் எல்லை தெரிவதில்லை, நமக்குத் தெரிந்த பொருளின் எல்லையையே நம்மால் காணமுடியாத போது, தெரியாத கடவுளை, எல்லையில்லாத கடவுளை, நம்மால் காணமுடியுமா? "கண்டால்தான் உண்மை என்று ஒப்புக்கொள்வேன் என்று சொல்லலாமா? 3 நாம் ஓர் வீட்டிற்குள் இருக்கிறோம். வீட்டிற்குள் இருந்து வீட்டின் புற எல்லையைப் பார்க்க முடியாது. வீட்டை விட்டு வெளி யே வந்து நின்றால் வீட்டின் புற எல்லையைத் தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு கால், இட எல்லையை நாம் கடந்து நின்றால் கால இட எல்லைக்கு அப்பால் இருக்கிற இறைவனைத் தெரிந்து கொள்ளலாம்.* இறைவன் கால எல்லைக்கும், இட எல்லைக்கும் அப்பாற்பட்டவன். அவற்றைப் பரிச்சின்னங்கள் என்பர். கால தேச பரிச்சின்னங் . சம்பத்தில் Life After Life என்ற புத்தகத்தைப் படித்தேன். உடம்!கிலிருந்து உயிர் போய் விட்டது என்று தீர்மானமான பிறகு, சில நேரம் கழித்து உயிர் மீட்டும் வந்து பிழைத்துக் கொள்கிறவர்கள் சிலர் உண்டு, அத்தகையவர்களை அணுகி, அந்த இடைப்பட்ட காலத்தில் அந்த உயிர்களுக்கு நேர்ந்த அநுபவங்களை விசாரித்துத் தொகுத்து அந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் ஆசிரியர், அவர்கள் கூறியவற்றில் பல அநுபவங்கள் பொதுவாக உள்ளன. உடலைப் பிரிந்த நிலையில் காலம் என்பதையே அவர்கள் உணர்வதில்லையாம். அதாவது காலம் கடந்த நிலை அது என்று சொல்லலாம்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/401
Appearance