உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாசுரப் போர் 385 ஏறியும் வசதியாகச் செல்லலாம். அது போல இந்தப் பிறப்பில் துன்பப் படுகிறவர்களுக்கு அடுத்த பிறப்பில் இன்பம் வரலாம்; இன்பத்தை அனுபவிக்கின்றவருக்கு அடுத்து பிறப்பில் துன்பமும் வரலாம். இந்தப் பிறப்பில் பாவம் செய்தவன் அடுத்த பிறப்பில் துன்புறுவான். இவர்கள் எல்லாம் ஜனன மரண யாத்திரையில் ஓயாமல் பயணம் செய்துகொண்டிருப்பார்கள். இப்படி உள்ளவர் களுக்கு இறப்பு என்பது மறு பிறப்பை எடுப்பதற்குக் காரணமாக அமைகிறது. இந்த உடம்பை விட்டுப் போன பிறகு மீட்டும் பிறக்காமல் விடுதலை பெறுகிற ஆன்மாக்கள் அடைவதுதான் வீடு. பிறப்பு இறப்பு அற்ற இன்ப துன்பமற்ற நிலைதான் வீடு. இந்த உடம்பு நமக்குரிய வீடாக இருக்கிறது. இதை விட்டுப் போனால் வேறு ஒரு வீட்டுக்குத்தானே போகிறோம் ? அப்படியானால் எதற்காக அஞ்ச வேண்டுமென்று தோன்றலாம். "இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ" என்று தாயுமானவர் சொல்கிறார். ஒரு சிறையில் இருந்தவனை மற்றொரு சிறைக்கு மாற்றுகிறபோது, இங்கே உள்ள காவலரைப் போல அங்கே உள்ளவர்கள் இருப்பார்களோ என்று பயப்படுகிறான். இங்கே நமக்கு வேண்டிய பிடி கிடைக்கிறதே, அங்கே தருவார்களோ' என்று அஞ்சுகிறான். ஞானிகள் மரணத்துக்கு அஞ்ச மாட்டார்கள். அவர்கள் வாழ்வுதான் மரணம் இல்லாத பெருவாழ்வு; பரிபூரணமாகும் வாழ்வு. அண்ணன். தம்பி இரண்டு பேர் கரும்புத் தோட்டம் போட்டார்கள். ஒரு நாள் அவர்கள் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, ஆட்கள் ஓடி வந்து, கரும்புத் தோட்டம் பற்றி எரிகிறது என்றார்கள். அண்ணன் கவலைப்படாமல், "போனால் போகட்டும்" என்றான். தம்பியோ, "ஐயோ அப்பா!" என்று அலறிக்கொண்டு ஓடினான். காரணம் என்ன? அண்ணன் கரும்புகளை வெட்டி, சாறு பிழிந்து, வெல்லமாகக் காய்ச்சி விற்றுவிட்டான். அண்ணன் தோட்டத்தில் இருப்பது வெறும் தோகைதான். அதற்குத் துரும்பு என்று பெயர். அவனே அதை எரித்துவிட எண்ணினான். அவனுக்குத் தீக் குச்சிகூடச் செல்வில்லாமல் யாரோ எரித்துவிட்டான். ஆகவே அவனுக்கு 49