தேவாசுரப் போர் 391, என்னைத் தாண்டி வரும்போது அவர்களுடைய கணுக்காலைத் தொடு வதற்குக் கூட என் ஆழம் பற்றவில்லை. அவர்களை நான் எப்படித் தடை செய்ய முடியும்?" என்று சொன்னான். பானுகோபன் போருக்குப் புறப்படல் உடனே சூரபன்மன் கோபம் கொண்டு தன் மகனாகிய பானு கோபனை அழைத்தான். அந்தண் மாமுகில் உயர்த்தவன் வேண்டலும் அமலன் தந்த கந்தனைச் சாரதத் தலைவர்க ளோடும் நந்த மைப்பொர விடுத்தனன் ; ஆதலின் நானும் மைந்த, நிற்கொடு வெற்றிபெற் றிருந்திடல் வழக்கே. (முதல் நாள் பானுகோபன், 10) கொண்ட இந்திரன். (முகில் உயர்த்தவன் - மேகத்தைக் கொடியாகக் அமலன்- சிவபெருமாள். சாறுதத்தலைவர்கள் - பூதகணத்தின் தலைவர்கன்.] . "பரமேசுவரன் அவன் மகன் கந்தனைப் போர்க்களத்திற்கு அனுப்பியுள்ளான். ஆகவே நானும் என்னுடைய மைந்தனாகிய உன்னைப் போர்க்களத்திற்கு அனுப்புவதுதான் சரியாக இருக்கும். நீ போய் எனக்கு வெற்றி தேடித் தருவதுதான் சரி" என்றான். தன்னைப் பரமேசுவரனுக்குச் சமானமாக நினைத்துச் சொன்னான், அறியாதவன். பானுகோபன் போர் பானுகோபன் உடனே ஆயுதசாலைக்குச் சென்று படைக் கலங்களை எல்லாம் எடுத்துக்கொண்டான். பத்தாயிரம் வெள்ளம் சேனையுடன் சண்டைக்குப் புறப்பட்டான். அவன் சண்டைக்கு வரு வதை அறிந்த முருகப்பெருமான் வீரவாகு தேவரைப் படைவீரர் களுடன் அனுப்பிவைத்தான். பூதத் தலைவர்கள் போர் செய்தார்கள். அசுரத் தலைவர்கள் எதிருன்றிப் பொருதனர். நவ வீரர்களுடன் போர் செய்யப் பானுகோபனே எதிர்வந்தான். நவவீரர்கள் ஒவ் வொருவரும் அவனிடம் தோற்று, மயங்கிப் போனார்கள். பின்பு வீரவாகு தேவரே பானுகோபன் முன்வந்து எதிர்த்தார். இரு வருக்கும் கடுமையான போர் நடந்தது.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/411
Appearance