உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாசிரப் போர் 383 கோபன் மறைந்து போகவே, அவனுடன் வந்திருந்த அசுரர்கள் யாவரும் மறைந்து போனார்கள். அவர்கள் யாவரும் கண்ணுக்குத் தெரியாத அருவுருவத்தில் வீரமகேந்திரப் பட்டணத்திற்குள் போய் அதைக் கண்டு தேவர்கள் எல்லாம் மிக்க மகிழ்ச்சி வீட்டார்கள். அடைந்தார்கள். அயன்மகன் மதலைசேய் அருவ மாகியே வியன்மிகு தனதுதேர் விடுத்து விண்வழிஇப் பயனறு முகிலெனப் படர்ந்து வல்லையின் நயனறு கடிமதில் நகருட் போயினான். (முதல் நாள்.361.) [அயன் மகன் - காசிபன். அவன் மதலை, குரன்; அவன் சேய், பானு கோபன்.] வீரவாகு தேவர் தம் பாசறைக்குத் திரும்பினார். சூரியன் மறைந்தான். போர்க்களத்தில் நடந்ததைத் தூதர்கள் ஓடிப் போய்ச் சூரனிடம் சொன்னார்கள். அப்போது அவன், "நானே நாளைக்குப் போர் செய்யப் போகிறேன்" என்று சொன்னான். இரண்டாம் நாள் போர் மறு நாள் காலையில் சூரபன்மன் எழுந்தான். 'என் மகனுக்குற்ற வசையைப் போக்குவேன்' என்று போருக்குப் புறப்பட்டான். சிங்கமுகன் பிள்ளை அதிசூரனையும், தாரகனின் மகன் அசுரேந்திரனை யும் முன்படையாக அனுப்பினான். இந்திரன் முருகனிடம் சென்று, சூரனே போருக்கு வந்திருப் பதைச் சொன்னான். வாயு பகவான் தேரை விட முருகன் போருக்குப் புறப்பட்டான். போர் நடந்தது. உக்கிரன் அதிசூரனை மாய்த்தான். அசுரேந்திரன் முன் வந்து பல பூத கணங்களை மாய்த்தான். லட்ச வீரர்கள் மாண்டார்கள். அப்போது வீரவாகு வந்தார். அசுரேந்திரனை அழித்தார். சூரபன்மன் வந்து நானொலி செய்தான். அதைக் கேட்டு யாவரும் அஞ்சி நடுங்கினார்கள். பிரமன் அஞ்சினான். திருமால் நடுங்கினார். இந்திரனும் நடுங்கினான். எமன் கூட அஞ்சினான். தரும தேவதை அஞ்சியது. ஐந்து பூதங்களும் அஞ்சின. உயிர்க் கூட்டங்கள் யாவும் பயப்பட்டன. 50