உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 கந்தவேள் கதையமுதம் மதுரைக் காஞ்சி என்ற நூலில் அந்தணர்கள் விடியற்காலத் தில், மலர்களில் உள்ள பூந்தாதை ஊதுகின்ற வண்டுகள் ரீங்காரம் செய்வதுபோல வேதத்தை ஓதுவார்கள் என்று வருகிறது. 41 தாதுண் தும்பி போதுரன் றாங்கு ஓதல் அந்தணர் வேதம் பாட இவற்றால் தமிழ்நாட்டின் தலைநகராக இருந்த மதுரை மாநகரில் வேதம் எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அந்த வேதம், நாம் இப்படிச் செய்ய வேண்டும், இப்படிச் செய்யக் கூடாது என்று, அறம் அல்லது தர்மங்களை வரையறுத்துச் சொல்கிறது. வேதம் நம்முடைய வாழ்வுக்கு அடிப் படைச் சட்டம். கச்சியப்ப சிவாசாரியார் இந்த நாட்டில் தர்மம் ஓங்கவேண்டுமென்று சொல்கிறார்; வேதத்தினாலே வரையறுக்கப் பட்ட தர்மங்கள் எவையோ அவை ஓங்க வேண்டுமென்று பாடுகிறார் நான்மறை அறங்கள் ஓங்க! நற்றவம் வேள்வி மல்க! என்றவர், மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்! என்று முடிக்கிறார். சிவபெருமானுடைய திருவருளில் ஈடுபட்டுப் பக்தி செய்கிறவர்கள் சைவர்கள். அவர்களுடைய சமயம் சைவம். சைவம் என்பது எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்வது. சைவ நெறி அன்பு நெறி. அந்த நெறி, அந்த நீதி, உலகம் கால்ணம் வழங்கி னால் உயிர்க் கூட்டங்கள் நன்றாக நிலவும் என்ற எண்ணத்தினால், "சைவ நீதி நிலவுக" என்று சொன்னார். வான்முகில் வழாது பெய்க! மலிவளம் சுரக்க! மன்னன் கோன்முறை அரசு செய்க! குறைவிலா துயிர்கள் வாழ்க! நான்மறை அறங்கள் ஓங்க! நற்றவம் வேள்வி மல்க! மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்! (பாயிரம்,5) சிவபெருமான் வணக்கம் அடுத்தபடி சிவபெருமானுடைய வணக்கத்தைச் சொல்லத் தொடங்குகிறார்,