உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பானுகோபன் வதை ஐந்தாம் நாள் போர் பிறகு ஐந்தாம் நாள் போர் தொடங்கியது. தூதர்கள் சூரனிடம் போய்ச் செய்திகளைச் சொன்னார்கள். போய் அவன் எழுது சித்திரப்பாவை போல உணர்வு இருந்தான். தூதர்கள் பானுகோபனிடம் போய்ச் சொன்னார்கள். அக்கினி முகாசுரன் இறந்து போனதை அவன் அறிந்தான். இரணியன் போர்க்களத்தை விட்டே பயந்து எங்கோ ஓடிப்போய் விட்டதையும் அறிந்தான். உடனே தன் தந்தையிடம் வந்து அவனைப் பார்த்துச் சொல்லத் தொடங்கினான்". பானுகோபன் அறிவுரை இராமாயணத்தில் இந்திரஜித்துக் கூடத் தன் தந்தையாகிய இராவணனுக்கு போர் தொடங்கிய பிறகு அறிவுரை கூறுகிறான். அதுபோலப் பானுகோபன் சூரபன்மனிடம் வந்து அறிவுரை சொல்லத் தொடங்கினான். மானம் தந்தையே, உன்னுடைய வேல் ஒடிந்து விட்டது. இல்லாமல் தோற்றுப் போனாய். உன்னுடைய வரங்கள் பயன்பட வில்லை. முருகவேள் உன்னிடம் கோபம் கொள்ளவில்லை. அவன் உண்மையாகக் கோபம் கொண்டானானால் சர்வாண்டங்களும் அந்தக் கோபத்தை ஆற்றாது." ஏற்ற தோர்சிலை இழந்தனை ; மானமும் இன்றித் தோற்று வந்தனை; தொல்வரத்து இயற்கையும் தொலைந்தாய்; சீற்றம் உற்றிலன் முருகவேள்; அவன்சினம் செய்யின் ஆற்று மோஎலா அண்டமும், புவனங்கள் அனைத்தும்? பானுகோபன் வதை. 14.) (சிலை -வில்லை.தொல் வரத்து இயற்கையும் - நீ பெற்ற பழைய வரங்களின் இயல்புகளும்.] "காட்டிலே சாமான்ய மிருகங்களை வேட்டையாடி அழிக்கி றார்கள் சிலர்; வேட்டையாடுவதிலே மிகவும் ஊக்கத்தோடு இருக்கிறார்கள். அப்போது புதர்க்குள் மறைந்திருக்கும் புலியானது