412 கந்தவேள் கதையமுதம் ஆற்றல் மைந்தரை இழந்தனை; நால்வகை அனிகத்து ஏற்றம் அற்றனை; என்னுடன் ஒருவள்நீ இருந்தாய்; மேல்தி சுழ்ந்ததின் குலத்தினை வேரொடு வீட்டக் கூற்றம் வந்ததும் உணர்கிலை; இசுலைமேற் கொண்டாய். பானுகோபன். 19.1 [அளிகம் படை. வீட்ட-அழிக்க. இகல் - பகை.] "நான் ஓர் உறுதியைக் கூறுகிறேன், கேள். தேவர்களைச் சிறை விட்டு. உள்ளத்திலுள்ள பகை உணர்ச்சியை நீக்கிவிடு. அப்போது உன்னுடைய பெருவளம் நிலைக்கும். முருகன் இங்கு வராமல் தன் ஊருக்குப் போய்விடுவான் " என்று செய்தான். தந்தைக்கு உபதேசம் உறுதி ஒன்று இனி மொழிகுவன்; பொன்னகர் உள்ளார் சிறைவிடுக்குதி; நம்மிடைச் செற்றமது அகற்றி அறுமு கத்தவன் வந்துழி மீண்டிடும்; அதற்பின் இறுதி யில்பகல் நிலைக்கும்நின் பெருவளம் என்றாள். பானுகோபன்,21.) (உறுதி -மேற்கொள்ளத்தக்க நல்ல செயல். பொன் நகர் - அமராவதி, செற்றம்- கோபம் வந்தூழி - வந்த இடத்துக்கு.] இன்றுவரை நடந்த நிகழ்ச்சிகளைக் கண்ட பிறகே பானு கோபன் இவ்வாறு சொன்னான். முன்பு அவனே போர் செய்தான். "பட்டறி, கெட்டறி, பத்தெட்டிறுத்தறி" என்பார்கள்.தன்னு டைய ஆற்றலையும், தன் படையாற்றலையும் நினைந்து முருகப் பெருமான் படைக்கு முன்னாலே நின்று அவன் அப்போது போர் செய்தான். முன்னாலே அறியாமையால் போய் எதிர்த்து நின்றாலும், அநுபவத்தைப் பெற்ற பிறகு அந்த அறிவு அவனுக்குப் பயன் பட்டது. 'நரம் எதிர்த்து முருகப் பெருமானை அழிக்க முடியாது என்று தெரிந்துகொண்டான். தான் உணர்ந்ததைத் தன் தந்தைக்குச் சொன்னான். உலகத்தில் உத்தமர்களாக இருக்கிறவர்கள் சுருதி, யுக்தி யினால் விஷயத்தைத் தெரிந்துகொண்டு, நல்ல வழியில் நடப்பார்கள். மத்திமமானவர்கள் அநுபவத்தை அடைந்த பிறகே நல்ல வழிக்கு வருவார்கள். அதமர்கள் எத்தனை அநுபவம் இருந்தாலும் தாம் கொண்ட தவறான கொள்கையை மாற்றிக்கொள்ள மாட்டார்கள்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/432
Appearance