உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 கந்தவேள் கதையமுதம் கூனொடு வெதிரே பங்கு குருடுபே ருமை ஆனோர் ஊனமது அடைந்த புன்மை யாக்கையோடு ஒழியும் அம்மா! மானமது அழிந்து தொல்லை வலி இழந்து உலகில் வைகும் ஏனையர் வசையின் மாற்றம் எழுமையும் அகல்வு துண்டோ? (பானுகோபன். 24.) ஊனமது-எழுவாய், புன்மை - இழிவு (வெதிர் - செவிடு. பங்கு - முடம். வசையின் மாற்றம் -பழிக்கும் சொல்.] 34 அழகு, இளமை, ஆற்றல், செல்வம், வீரம், சொந்தச் சுற்றத்தார், வச்சிர சரீரம் இவைகள் எல்லாம் இருந்தும், நிச்சயமாக இவைகள் அழிந்துவிடும். இது உனக்குத் தெரியும். ஆனால் புகழ் ஒன்று மாத்திரம் அழியாது. பகைவர்களோடு போரிட்டு உயிர் விட்டாலும் கூட நமக்குப் புகழ் அழியாது. அந்த மாதிரி உயிர் விட்டாலும் விடுவேனே தவிரத் தேவர்களைச் சிறைவிடமாட்டேன் " என்று வீராவேசமாகப் பேசினான் சூரன். பேரெழில், இளமை, ஆற்றல், பெறலரும் வெறுக்கை, வீரம், நேரறு சுற்றம், யாக்கை, யாவையும் நிலையா அன்றே ; சீர்எனப் பட்ட தன்றே நிற்பது ? செறுநர் போரில் ஆருயிர் விடினும் வானோர் அருஞ்சிறை விடுவ துண்டோ ? (பானுகோபன்.26.) [வெறுக்கை -செல்வம். நேர் அறு -ஒப்பற்ற, சீர் - புகம்-செறுநர் - போரிடும் வீரர்.] மேலும் அவன் பேசினான்; "நான் இறக்கும்படி நேர்ந்தாலும் மானத்தை விடமாட்டேன். பெரியவர்கள் மரணம் வந்தாலும் ஏற்றுக் கொள்வார்கள்: மானத்தை விட மாட்டார்கள். இரண்டு நாள் இருக்கும் செல்வத்தை நம்பி, மேற்கொண்ட கொள்கையை விடமாட்டேன். சூரன் என்று எனக்கு ஒரு பேர் இருக்கிறது. அந்தப் பெயரை மாற்றிக்கொள்ள விரும்பேன் " என்றான். இறந்திட வரினும் அல்லால் இடுக்கணொன் றுறினும் தம்பால் பிறந்திடு மானத் தன்னை விடுவரோ, பெரிய ரானோர்? சிறந்திடும் இரண்டு நாளைச் செல்வத்தை விரும்பி, யானும் துறந்திடேன் பிடித்த கொள்கை; சூரன்என்று ஒருபேர் பெற்றேன். [இடுக்கண் - துன்பம்.] பானுகோபன், 27.)