உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திங்கமுகாசுரன் வதை 427 சிங்கமுகாசுரன் தன் தேர்மேல் ஏறிக்கொண்டு போர் செய்தான். அதை வீரவாகு தேவர் கண்டார். மிகவும் கோபத் துடன் அவனை எதிர்த்தார். பல அவுணர்கள் மடிந்தார்கள். சிங்க முகாசுரனின் புதல்வர்கள் நூறு பேர் வந்து எதிர்த்தார்கள். வனைந்தனர், வீரஜ் தோளில் மார்பினில் கரத்தில் மொய்ம்பில் களந்தனில் சென்னி தன்னில் கருதினர் இலக்கம் தாடிக் கிளர்ந்திடு நாந்த கத்தால் கிட்டினர் எறித லோடும் உளம்தளர் வில்லோன், மேனிக்கு உற்றில் சிறிதும் ஊறு. {சிங்கமுகாசுரள். 197.) [வீரன் - வீரவாகு. மொய்ம்பில் - தோனில்.களந்தனில் - கழுத்தில். இலக்கம் - குறி. காந்தகம் - வான். ஊறு - துன்பம்.] அவர்கள் வீரவாகு தேவரின் ஒவ்வோர் அங்கத்திலும் அம்புகளை எடுத்து விட்டார்கள். அவற்றால் வீரவாகு தேவருக்குச் சிறிதும் துன்பம் உண்டாகவில்லை. அவர் சிங்கமுகாசுரன் பிள்ளைகள் நூறு பேரையும் அழித்தார். அப்போது சிங்கமுகன் சினந்து வந்து எதிர்த்தான். சிங்கமுகன் வினாவுதல் வீரவாகு தேவரைப் பார்த்து அவன் பேசத் தொடங்கினான். சிவபெருமான் தந்த மைந்தனாகிய முருகப் பெருமான் நீ அல்ல ; அவனுக்கு ஆறுமுகம் உண்டு. லட்சம் வீரர்கள் என்று சொல்கிறார் களே' அவர்களுக்கு எல்லாம் தலைவனா? அல்லது எட்டுப்பேர் இறந்து போனார்களே, அவர்களுள் ஒருவனா? முன்பு எங்கள் ருக்கு வந்த தூ தன் நீதானோ? நீ யார்?" என்று கேட்டான். ஆதிதந் தருளும் மைந்தன் அறுமுகன் அவன்நீ அல்லை ; ஏதிலா இலக்கர் என்றே இசைத்திடு வோர்கள் தம்முன் நாதனோ? எண்மர் தம்முள் ஒருவனோ? நம்ஊர் வந்த தூதனோ? இளையர் தம்முள் யாரைநீ சொல்லு கென்றன். (சிங்கமுகாசுரன். 207.} (ஆதி - சிவ பெருமான். ஏது - தீங்கு. யாரை : ஐ, சாரியை.) அதற்கு வீரவாகு தேவர் விடைசொல்லத் தொடங்கினார்.