உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் வாழ்த்து 25 அண்டலிங்கத்திற்கு அதன் திருமேனியில் சாத்திய மலர்களைப் போல வானத்தில் பளிச்சிடுகின்ற நட்சத்திரங்களின் வரிசைகள் தோன்றுகின்றன. இதனைத் திருமூலர் சொல்கிறார். 66 தரைஉற்ற சக்தி ; தளிலிங்கம் விண்ணாம்; திரைபொரு நீரது மஞ்சன சாலை; வரைதவழ் மஞ்சுநிர்; வான்டு மாலை; கரை அற்ற நந்தி கலையும் திக்குஆமே. (திருமந்திரம்) [சத்தி-ஆவுடையார், திரைபொரு நீர் - கடல். மஞ்சு - மேகம். உ-டு - நட்சத் திரம், நந்தி - சிவன். கலை - ஆடை, இந்தப் பூமியே சக்தியாகிய ஆவுடையார்; மேலே தோன்று கிற அரை வட்டமாகிய வானம் அண்டலிங்கம். அலைகள் மோதுகின்ற கடலே திருமஞ்சன நீரைத் தேக்கி வைத்திருக்கும் இடம். மேகத்திலிருந்து பெய்யும் மழையே திருமஞ்சனம். வானத்தில் தோன்றுகிற உடுக்களே மாலை. இதனைச் சுற்றி யிருக்கிற எட்டுத் திக்குகளே ஆடை. இப்படி இங்கே திருமூலர் காட்டுகின்ற அண்டலிங்கந்தான் அருவுருவம். அது பார்ப்பதற்கு லிங்கம் போலத் தோன்றினாலும், 'உருவமாக இருக்கிறதே, அதனைத் தொட்டுப் பார்க்கலாம்" என்று போனால் போகப் போக அது போய்க்கொண்டே இருக்கும். அது வெறும் தோற்றமேயொழிய உருவம் அன்று. கண்ணுக்கு ஒரு வகையாகப் புலப்படுவதனால் அருவம் என்று சொல்ல முடியாது. அது தொடுவதற்குரியது அன்று, ஆகையால் உருவம் என்றும் சொல்ல முடியாது. தோற்றமளிப்பதால் உருவமாகவும், உண்மையில் இல்லாமையால் அருவமாகவும் கொள்ளலாம். அதுவே அருவுரு வம். இந்த அண்டலிங்கத்திற்குள் அடங்காத பொருள் இல்லை. எங்கிருந்து பார்த்தாலும் அவரவர்களுடைய கண்ணுக்குத் தோன்று கிற எல்லாப் பொருள்களுமே இந்த அண்டலிங்கத்திற்குள் அடங்கி யிருப்பதைப் பார்க்கலாம். இப்படிப் பிரபஞ்சம் முழுவதும் அண்ட லிங்கத்திற்குள் அடக்கமாக இருக்கிறது. என்ற அமைப்புத் தோன்றியது. இத்தகைய அற்புதமான தோற்றத்திலிருந்து சிவலிங்கம் அண்டத்தில் தோன்றியதைப் பிண்டத்தில் காட்டினார்கள். ஆகையால் சிவலிங்கம் என்பது