உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 கந்தவேள் கதையமுதம் மயங்கிய வீரர் வருதல் உதயகிரியில் போய் மயங்கிக் கிடக்கிற வீரர்களை எண்ணினான் ஆண்டவன். உடனே ஓர் அம்பு விட்டு, அங்குள்ள வீரர்களை எல்லாம் அழைத்து வரும்படி செய்தான். அந்த அம்பு அங்கே சென்று வீரர்களைக் கட்டியிருந்த பாசப்படையை அறுத்தது. வீரர்கள் முருகன் திருவருளால் தூங்கி எழுந்தவர்களைப் போல எழுந்தார்கள். பாசத்தளை அற, அவர்கள் நல்லுணர்வு பெற்றவுடன் முருகப் பெரு மானைப் புகழ்ந்து பாடினார்கள்; வாழ்த்தினார்கள். பாசத் தளையில் படுவார் அதுநீங்கி மாசற்ற நல்உணர்வு வந்துஎய்த உய்ந்தனராய்ப் பேசற் கரியஇன்பம் பெற்றோர்கள் தாமாகி ஈசற் கினியான் இணையடிகள் வாழ்த்தெடுத்தார். [சிங்கமுகாசுரன். 360.) [பாசத்தனை -பாசமென்னும் விலங்கு. உணர்வு - ஞானம்.] அவர்கள் உணர்வு பெற்று எழுந்தது, பாசம் என்னும் தளைப் பட்டவர்கள் ஞானத்தினால் அது நீங்கி உய்ந்து வந்தவர்களைப் போல வந்தார்களாம். முருகப் பெருமான் விட்ட அந்த அம்பானது பிரம்மா உண்டாக் கிள புட்பக விமானத்தைப் போலப் பெரிதாக நின்று, அங்கிரும் வீரர்கள் அனைவரையும் கமந்துகொண்டு, விசும்பின் வழியே வந் போர்க்களத்தில் கொண்டுவந்து விட்டது. 23 ஆங்கதுகா லத்தில் அறுமுகவேள் உய்த்தகணை பூங்கமலத் தோன்உதவு புட்பகத்தின் மாட்சியதாய்த் தீங்கில் இள மைத்தர்தமைச் சேனை யொடுமுகந்து தாங்கு விசும்பின் தலைக்கொண்டு சென்றதுவே. [பூங்கமலத் தோன் - பிரமன்.) (சிங்கமுகாசுரன்.870.) ஆண்டவன் அவர்கள் அனைவருக்கும் அனுக்கிரகம் செய்தான். 'மிகவும் வருந்தினீர்கள் போலும் !' என்று அவர்களைப் பார்த்துச் சொன்னான். உடனே அவர்கள், "எங்களுக்குப் பழைய உணர்வு போனால் என்ன ? அல்லது உயிர் போய் ஈரகத்தில் அழுந்தினால்தான் என்ன?