சூரபன்மன் வதை 449 கொண்டு வா என்றான். அந்தத் தேர் அப்படியே பாற்கடலுக்கு அப்பால் சென்று மந்தரகூடக் குன்றைக் கொண்டு வந்தது. அதன் காற்றுப் பட்டவுடன் இறந்தவர்கள் எல்லோரும் எழுந்தார்கள். எழுந்தான்வயப் புலிமாமுகன் ; இரவிப்பகை எழுந்தான்; எழுந்தான்எரி முகவெய்யவன் ; இளமைந்தனும் எழுந்தான் எழுந்தான்அறத் தினைக்காய்பவன்; இருபாலரும் எழுந்தார்; எழுந்தார்ஒரு மூவாயிரர் ; ஏனோர்களும் எழுந்தார். சூரபன்மன் வதை.306. வயம் - வலிமை, இரவிப்பகை - பானுகோபன். எரிமுக வெய்யவன் - அக்கினி முகாகரன். அறத்தினைக் காய்பவன் -தருமகோபள்.] அவர்கள் அத்தனை பேரும் முருகப் பெருமானுடன் போர் செய்ய வந்தார்கள். எழுந்தவர் அழிதல் முருகன் பாசுபதாஸ்திரத்தை வீசினான். எழுந்து நின்ற அத்தனை பேர்களையும், அது பல படைக்கலன்களாகச் சென்று அழித்துவிட்டது. அதோடு நிற்காமல் இந்திர ஞாலத் தேர்மேல் இருந்த மந்தரகூட மலையைத் தூள் தூளாக ஆக்கியது. முருகப்பெருமானிடம் வந்து சேர்ந்தது. பின்னர் முந்து வெய்யசூர்ப் பரிசனத் தொகையெலாம் முருக்கி இந்தி ரப்பெரு ஞாலமாம் தேர்மிசை இருந்த மந்த ரப்பெருங் கிரியினைத் துகளெழ மாய்த்துக் கந்த வேள்புடை மீண்ட .து சிவன்படைக் கலமே. (சூரபன்மன் வதை.330.) [பரிசனத் தொகை - உறவினர் கூட்டம். முருக்கி -அழித்து. கலம் - பாசுபதாஸ்திரம்.} "* சிவண்படைக் மறுபடியும் சூரன் தனியாக நின்றான். அவன் அப்போது இந்திரஞாலத் தேரைப் பார்த்து, "நீ பூதர்களை அள்ளிக் கொண்டு அண்டத்து உச்சியில் கொண்டு போய் வை என்றான். அப்படியே அந்தத் தேர் வீரவாகு முதலிய யாவரையும் தூக்கிச் சென்று அண்டகோள உச்சியில் வைத்து அங்கேயே இருந்தது. முருகன் ஒரு கணையை விட்டுத் தேரோடு அவர்களைக் கொண்டு வரச் செய்தான். இந்திர ஞாலத் தேரைப் பார்த்து, "நீ இனி மேல் சூரனிடத்தில் போகாதே. இங்கேயே நில்" என்று அதட்டினான். 57
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/469
Appearance