சூரபன்மன் வதை சூரன் அதோடு நிற்கவில்லை. வெவ்வேறு வடிவங்கள் எடுத் தான். பூமியைப் போல நின்றான். புனல் போல கின்றான். நெருப் பாக, காற்றாக மாறினான். எல்லாவற்றையும் அம்பால் முருகன் அட்டான். இப்படி நான்கு நாட்கள் கடும் சண்டை நடந்தது. அவன் மூவர்களில் ஒருவனாக வந்தான் தேவர்களில் ஒருவனாக வந்தான். பாம்பு, முகில், இடி, இருள்,மலை, களிறு எனப் பலப் பல உருவங் களில் வந்தான். தன் பிள்ளைகளைப் போல எல்லாம் வந்தான். அவன் எந்த எந்த வடிவத்தோடு வந்தாலும் அந்த அந்த வடிவத்தை முருகன் அழித்தான். முடிவில் சூரன் எல்லாம் அழிந்து தனியாக நின்றான். முருகன் விசுவ ரூபம் காட்டல் முருகப் பெருமான் அவனைப் பார்த்து, " இது வரை நீ பற்பல வடிவங்கள் கொண்டாய். எல்லா வடிவங்களையும் நான் அழித்தேன். இப்போது என்னுடைய வடிவத்தை நீ பார்ப்பாயாக' என்று சொல்லி விசுவரூபத்தை எடுத்துக் கொண்டான். வெம்புயல் இடையில் தோன்றி விளித்திடும் மின்னு என்ன இம்பரில் எமது முன்னம் எல்லையில் உருவம் கொண்டாய்; அம்பினில் அவற்றை எல்லாம் அட்டனம்; அழிவு இலாத எம்பெரு வடிவம் கொள்வம்; நன்றுகண் டிடுதி என்றான். (சூரபன்மன் வதை. 421.) (புயல் - மேசும். இம்பரில் - இங்கே. அட்டனம் -அழித்தோம்.] சூரபன்மன் போர்க்களத்திற்கு வந்த போது, ஆண்டவனுக்கு அவனை அழிக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாகவில்லை. சூரபன்மன் முருகனைப் பகைவனாக எண்ணினானே தவிர, முருகன் அவனை அவ்வாறு எண்ணவில்லை. பொல்லாத பிள்ளையை அழிக்க வேண்டுமென்று பெற்றோர் நினையார்; திருத்த வேண்டுமென்றே விரும்புவர். அப்படியே அவனுக்கு அருள் செய்யவேண்டுமென்ற எண்ணம் முருகனுக்கு உண்டாயிற்று. சூரபன்மனுக்கு அகங்காரம் வருவதற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்தான். சூரனுடைய பலம், வரம், துணைவர்களுடைய ஆற்றல் எல்லாம் அவனுடைய கர்வத்தை மிகுதிப்படுத்தின. இப்போது அவற்றை எல்லாம்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/471
Appearance