சூரபன்மன் வதை 453 திருவுள்ளம். ஆகவே அவன் அவனுக்குச் சிறிது உணர்ச்சியைத் தந்தான். இறுதியும் முதலும் இல்லா இப்பெரு வடிவந் தன்னைக் கறைவிடம் உறழும் சூரன் கண்டுவில் மிதத்தின் நிற்ப அறிவரும் உணர்தல் தேற்ற ஆறுமா முகத்து வள்ளல் சிறிதுநல் உணர்ச்சி நல்க, இனையன செப்பல் உற்றான். (சூரபன்மன் வதை.430. [கறை விடம் உறமும் சூரன் - கறுப்பாகிய விடத்தை ஒத்த சூரன். விம்மிகத்தின் - வியப்பினால்.] எம்பெருமானுடைய பெரிய திருவடிவத்தைச் சூரபன்மன் பார்த்தான். முருகப் பெருமானுடைய அழகு முழுக்க அவனுக்குத் தெரிந்தது. அவன் கையிலுள்ள ஆயுதங்கள் நழுவின. அவனுக்குப் பெரிய வியப்பு உண்டாயிற்று. அந்த உருவப் பேரழகில் ஈடுபட்டான். இதற்கு முன்னாலே அவன் பார்த்தாலும் ஞானம் இல்லாத பார்வையாக இருந்ததனால் உண்மை தெரியவில்லை. இப்போது ஆண்டவன் ஞானம் தந்ததனால் நன்றாகப் பார்த்தான். அறிவுக் கண் வெறும் கண் கொண்டு பார்க்கிற பார்வை சிறப்புடையது அன்று. அறிவோடு சேர்ந்திருந்தால்தான் பார்வை சிறப்புடையதாக இருக்கும். அறிவு இல்லாத கண் பார்வை அரைப் பார்வை. பார்க்கிற பார்வைக்கும் குழந்தை பார்க்கிற வேறுபாடு உண்டு. நாம் பார்வைக்கும் ஒரு சின்னஞ் சிறு குழந்தை கூடத்தில் தவழ்ந்து கொண்டிருக் கிறது. அப்போது ஒரு நாகப் பாம்பு அதன்முன் படம் எடுத்து ஆடுகிறது. குழந்தை அந்தப் படத்தின் பளபளப்பைக் கண்டு அதைப் பிடிக்கப் போகிறது. அந்தக் குழந்தைக்குப் பாம்பின் இயல்பு தெரியாது. கண்ணில் கண்ட பளபளப்பில் மயங்கி அதைப் பிடிக்கச் செல்கிறது. அந்தக் குழந்தையின் தாய் அப்போது வருகிறாள். அவளுக்கும் அந்தப் பாம்பின் பளபளப்புத் தெரிகிறது. அவளுக்கு அறிவு என்ற கண்ணும் உண்டு. ஆகையால் பாம்பைப் பார்த்த வுடன் திடுக்கிட்டுத் தன் குழந்தையை எடுத்துக் கொண்டு, பாம்பை அடிக்க ஓடுகிறாள். இரண்டு பேரும் நாகப் பாம்பின் படத்தைப்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/473
Appearance