ரபன்மன் வதை 455 தேவாசுர இராவண யுத்தம். பதினெட்டு ஆண்டு நடந்தது யுத்தம்.* தேவாசுர யுத்தம் என்று முருகனுக்கும் சூரபன்மாவுக்கும் கடந்த யுத்தத்தைச் சொல்வார்கள். பத்து நாள் என்று கந்த புராணம் சொல்லுகிறது. அது சண்முகமானம்போலும்!சிலப்பதி காரம் நம் கணக்குப்படி 18 வருஷம் என்கிறது, இதைக் கேட்டால் நமக்கு என்ன தெரிகிறது? சூரபன்மன் அத்தகைய பலம் உடையவனா? அவளை வெல்வதற்கு முருகனுக்குப் பதினெட்டு ஆண்டு கள் பிடித்தன என்றால் முருகன் பலமற்றவன் போலிருக்கிறது என்று தோன்றும். பதினெட்டு ஆண்டுக் காலம் அவன் தன் பகைவனை அழிக்காமல் போர் செய்தான் என்றால், உண்மை என்ன ? முருகப் பெருமான் சூரபன்மனை அழிக்க வேண்டுமென்றே எண்ணவில்லை. அவனோடு போர் செய்வதாகவே அவன் எண்ணவில்லை, அவனைத் திருத்த எண்ணினான். ஆகையால் நெடுங்காலம் போரிட்டுப் பார்த்தான். அவன் திருந்தவில்லை. 14 பக்குவம் வேண்டும் இறைவனுடைய திருவருள் கிடைத்தாலும் அதை ஏற்றுக் கொள்ள ஒரு பக்குவம் வேண்டும். பக்குவம் இல்லாதவர்களுக்குத் திருவருள் பலிக்காது. மாணிக்கவாசகர் இதைச் சொல்கிறார். ஆண்டவனே நீ, உன் பேரருளால் கருணை வழங்குகின்றாய். ஆனால் அதை எனக்கு அநுபவிக்கின்ற திறமை இல்லை. நீ உன் அருள் என்ற அமுதத்தை வழங்கினாய். நான் வாரிக்கொண்டு விழுங்கினேன். எனக்குப் பக்குவம் இல்லாமையினால் விக்கிவிட்டது. அந்த விக்கல் தீரவும், அருள் அமுதம் பயன்படவும் தண்ணீர் கொடு" என்று வேண்டுகிறார். "வழக்குகின் றாய்க்குஉன் அருள் ஆர் அமுதத்தை வாரிக்கொண்டு விழுங்குகின் றேன்விக்கி னேன்வினை யேன்என் விதிஇன்மையால்; தழங்கு அரும் தேன் அன்ன தண்ணீர் பருகத்தந்து உய்யக்கொள்ளாய்; அழுங்குகின் றேன்உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே." "உயிர்த்தொகை உண்ட ஒன்பதிற்று இரட்டியென்று, யாண்டும் மதியும் நாளும் கடிகையும், சண்டுநீர் ஞாலம் கூட்டி எண்டுகாள (சிலப். நீர்ப்படைக் 8-10) என்பதையும், பிர்த்தொகை உண்டளவாகிய ஆண்டும் மதியும் நாளும் கடிகையும் ஒன்பதிற் றிரட்டி என்று அவற்றோடே கூட்டி என்ண, தேவாகரயுத்தம் பதினெட் டாண்டிலும்,இராம ராவண யுத்தம் பதினெட்டு மாதக்கிலும், பாண்டவ துரியோதன யுத்தம் பதினெட்டு நாளிலும், செங்குட்டுவனும் கனகவிசயரும் செய்த யுத்தம் பதி னெட்டு நாழிகையிலும் முடிந்த வென்று எண்ண' என்ற அதன் உரையையும் காண்க.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/475
Appearance