உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கந்தவேள் கதையமுதம் புராணம். ஆதலால் அதனை எண்ணி அறிஞர்கள் இதனை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதையே இவ்வாறு சொல்கிறார். குறைபல மாமதி கொளினும் அன்னதால் உறுபயன் நோக்கியே உலகம் போற்றல்போல் சிறியஎன் வெளிற்றுரை சிறப்பின் ருயினும், அறுமுகன் கதை இதென் றறிஞர் கொள்வரே. [மதி - சந்திரன், வெளிற்றுரை - பயன் இல்லாத உரை.) (அவையடக்கம், 7,) . கந்தபுராணம் விருத்தங்களால் அமைந்தது; ஆசிரியப்பாவின் இனத்தைச் சார்ந்த விருத்தமாக இருக்கிறது ஒப்பற்ற கதையாகிய இது கந்தனுடைய வரலாறு. காஞ்சிமா நகரத்தில் அரங்கேற்றப் பெற்றது. செந்தமிழ்க்கு வரம்பெனச் செப்பிய காஞ்சி' என்று பெரியவர்கள் எல்லாம் அதனைச் சிறப்பிப்பார்கள். இந்தக் கருத் துக்களை எல்லாம் அவையடக்கத்தில் கச்சியப்ப சிவாசாரியார் சொல்கிறார்.