468 கந்தவேள் கதையமுதம் இப்போது பார்க்கிற பார்வை வேறு. இதற்குமுன், 'எனக்கு வேண்டியவைகள், வேண்டாதவைகள்' என்ற பற்று இருந்தது. வேண்டியவற்றில் அன்பும், வேண்டாதவற்றில் கோபமும் எழுந்தன. தன்னுடையன அல்லாத பொருள்களைத் தன்னுடையவை ஆக்கிக் கொள்ள வேண்டுமென்ற ஆசை எழுந்தது. இப்போது, எங்கே பார்த்தாலும் இறைவனுடைய வடிவமாகத் தோன்றியது. எல்லாம் அவனுடைய சொந்தப் பொருள் என்ற உணர்வு வந்து விட்டது. தலையில் பெரிய கனமான மூட்டையைச் சுமந்து கொண்டு அங்கும் இங்கும் திரும்பாமல் வருகிறான் ஒருவன். மூட்டையைச் சுமைதாங்கி மேல் வைத்துவிட்டுக் கழுத்தைத் திருப்பி இரண்டு பக்கமும் பார்க்கிறான். அவன் கண்ணுக்கு அழகான பூஞ்சோலையும் மற்றக் காட்சிகளும் தெரிகின்றன. இதுவரைக்கும் அவற்றைக் காணவில்லையே என்று ஆச்சரியப்படுகிறான். அது போல, இங்கே சூரன் தன் தலைக்கனம், அகங்காரம் போன பிறகு பார்க்கிறபோது எல்லாமே இறைவனோடு தொடர்பு உடையன. வாகத் தோன்றின. இதை அவன் சொல்கின்றான். போயின அகந்தை; போதம் புகுந்தன; வலத்த வான தூயதோர் தோளும் கண்ணும் துடித்தன; புவனம் எங்கும் மேயின பொருள்கள் முற்றும் வெளிப்படு கின்ற; விண்ணோர் தாயகம் வடிவம் கண்டேன்; நற்றவப் பயன்ஈ தன்றோ? [போதம் ஞானம். - தோன்றுகின்றன.] வெளிப்படுகின்ற (சூரபன்மன் வதை. 418.) உண்மையான உருவத்தோடு "இதற்கெல்லாம் என்ன காரணம்? நல்ல தவத்தினால் பெறுகிற பயன் இது அல்லவா ? எம்பெருமான் வடிவத்தை நான் கண்டேன் என்று அவன் சொல்கிறான். மானம் தடுத்தல் மனத்தில் அகங்காரம் போக, அன்பினால் உள்ளம் உருக, உடம்பெல்லாம் புளகம் போர்த்து நின்ற சூரபன்மன் அடுத்தபடி
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/488
Appearance