உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470 கந்தவேள் கதையமுதம் "என்னைச் சேர்ந்தவர்கள் எல்லாம் தேவர்களைச் சிறை செய்தது தவறு என்று சொன்னார்கள். அப்படிச் செய்ததனால்தான் நான் ஆண்டவன் வடிவத்தைத் தரிசனம் செய்கிறேன். வேதத்தாலும். காணமுடியாத எம்பெருமானை, பிரமனும் தேவர்களும் காண்பதற் கரிய எம்பெருமானை, நான் இங்கே என் கண்முன்னால் காண்கிறேன். என்றால், நான் அப்படிச் செய்ததும் நன்றாயிற்று. ஏதம்இல் அமரர் தம்மை யால்சிறை செய்த தெல்லாம் தீதென உரைத்தார் பல்லோர் ; அன்னகன் செய்கை யாலே வேதமும் அயனும் ஏனை விண்ணவர் பலரும் காணா நாதன் இங்கு அணுகப் பெற்றேன்: நன்றுஅதே ஆனது அன்றே! (சூரபன்மன் வதை. 247.) று தனக்குச் சமானமாக யாரும் இல்லாத, தானே தனி மூர்த்தி யாக இருக்கிறவன் பெருமான் அவனுக்கு முன்னால் நான் நின் அமர் செய்தேன் என்பது எனக்குப் பெருமை அல்லவா ? இனிமேல் நெஞ்சம் தளரமாட்டேன். என்னைப்போன்ற வீரன் யார் இருக்க முடியும்? முருகப் பெருமானுக்கு நேர்நின்று போர் செய்தேன் என்ற புகழ் எப்போதும் இருக்குமே ! இந்த மாய உடம்பு நில்லாது. இது போனால் போகட்டும். முருகனுடன் போர் செய்தான் என்ற புகழ் போதும் என்றான். ஒன்றொரு முதல்வ னாகி உறைதரும் மூர்த்தி முன்னம் நின்றமர் செய்தேன் இந்தாள்; தெஞ்சினித் தளரேன் அம்மா! நன்றிதோர் பெருமை பெற்றேன் : வீரனும் நானே ஆனேன் ; என்றும்இப் புகழே நிற்கும்; இவ்வுடல் நிற்ப துண்டோ? (சூரபன்மன் வதை. 148.) (ஒன்றொரு முதல்வன் - தனிமுதல்வன்.] சூரபன்மன் தன் வடிவைக் கண்டு மனம் உருகி, சிறந்த அடியான்போல நிற்பதை ஆண்டவன் பார்த்தான். இனி விரைவில் ஆட்கொள்ள வேண்டுமென்று திருவுள்ளம் கொண்டான்.