473 செங்கதிர் அயில்வாள் கொண்டு செருமுயன்று உருமின் ஆர்த்துத் F துங்கமொடு எதிர்ந்து சிறும் சூர்உரம் கிழித்துப் பின்னும் அங்கமது இருசு. ருக்கி அலைசுடல் வரைப்பில் வீட்டி எங்கணும் மறைகள் ஆர்ப்ப எஃகம்வான் போயிற்று ஆம்மா. (சூரயன்மன் வதை. 480.) [அயில் - கூர்மை. உருயின் - இடியைப் போல. உரம் -மார்பு, கடல் வரைப்பில் கடலாகிய இடத்தில். வீட்டி - வீழ்த்தி. எஃகம் - வேல்.] Gr சேவலும் மயிலும் இரண்டு கூறாகிய சூரனுடைய உடம்பில் ஒரு கூறு சேவலா கவும், மற்றொரு கூறு மயிலாகவும் வந்து சினத்தோடு முருகனை திர்க்க வந்தன. அந்தப் பறவைகளின் வடிவத்தில் வந்த சூரனை, முருகப் பெருமான் தன் கருணை பொழியும் விழிகளால் பார்க்க, அவன் பகை உணர்வு நீங்கினான். சித்தர்கள் பார்வையினால் இரும்பு பொன்னாவது போல, எம்பெருமானின் கருணைப் பார்வையினால் சூரன் தன் பகையுணர்வுபோய் நின்றான். போர் செய்ய மிக வேகத் தோடு வந்த இரண்டு பறவைகளும் மிகவும் தெருள்கெழு மனத் தோடு கின்றன. மருள்கெழு புள்ளே போல வத்திடு சூரன் எந்தை அருள்கெழு நாட்டம் சேர்த்த, ஆங்கவன் இகலை நீங்கித் தெருள்கெழு மனத்த னாகி நின்றனன், சிறந்தார் நோக்கால் இருள்கெழு கரும்பொன் செம்பொன் கிய இயற்கை யேபோல். சூரபன்மன் வதை. 485. (மருள் - மயக்கம். இகல் - பகையுணர்வு. தெருள் - தெளிவு. கரும் பொன் + இரும்பு.] ஆண்டவன் அப்போது சேவலைப் பார்த்து, "நீ எனக்குக் கொடியாய் நிற்பாயாக !” என்றும், மயிலைப் பார்த்து, "நீ எனக்கு 60
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/493
Appearance