உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூரபன்மன் வதை 475 "அவனுடைய சந்நிதியில் உற்றவர்கள் முதலில் தம் அழுக்கு நீங்க, பிறகு அவன் திருவருளைப் பெறுவார்கள். இந்த உண்மை யைத் தெரிந்து கொள்ளப் பெரிய ஆராய்ச்சி செய்ய வேண்டாம். எல்லோருடைய மயக்கத்திற்கும் காரணமாகிய மாயையின் சொந்தப் பிள்ளையாகிய சூரனே எல்லையில்லா அருளைப் பெற்று உய்ந்தான். அதிலிருந்து இது தெரியவில்லையா?" என்று பாடுகிறார் கச்சியப்பர். காவேரிக்குப் போகிறவன் முதலில் தன் கையை அந்த நீரில் கழுவிக் கொள்வான். பின்பு தண்ணீர் குடிப்பான். கழுவுவதற்கு வேறு தண்ணீர் வேண்டும் என்பது இல்லை. அதுபோல் முருகப் பெருமானது சந்நிதானத்திற்குப் போனால் முதலில் நம்முடைய பற்றுக் கள் போய்விடும். பிறகு அவன் திருவருளால் இன்பம் அடையலாம். நம் பற்றுக்கள் போகவும் அவன் திருவருள் வேண்டும். பேரின்பம் கிடைப்பதற்கும் அவன் திருவருள் வேண்டும். அழுக்கு இருக்கிறதே என்று அஞ்சியிருக்கக்கூடாது. அவனைச் சரணடைய வேண்டும். இந்த உயர்ந்த தத்துவத்தைச் சூரசங்காரம் நமக்கு உணர்த்துகிறது என்று எடுத்துக் காட்டுகிறார் கச்சியப்பர். மயிலின் இயல்பு முருகப் பெருமானுக்கு மூன்று மயில்கள் உண்டு. எப்போதும் உள்ள மயில் பிரணவம்.

ஆன தனிமந்த்ர ரூப நிலைகொண்ட தாடு மயில் (திருப்புகழ்) என்பர் அருணகிரியார். போர் நடந்தபோது இந்திரன் மயிலாக வந்தான். அதை முன்பு பார்த்தோம். இப்போது சூரன் மயிலக வந்து விட்டான். சூரனாக இருந்த போது அவனுக்கிருந்த இயல் புகள் இப்போது இல்லை. அவற்றுக்கு நேர்மாறான மென்மையுடைய மயிலானான், சூரபன்மனாக இருந்த போது அவன் கண்பட்ட இடங்கள் புண்பட்டுப் போயின. யார் தன் முன்னாலே வாழ்வு பெற்றாலும் அதை மாற்றிவிட்டான் சூரன். யாருக்கும் அநுகூலம் செய்யமாட்டான் : பிரதிகூலம் செய்வான். ஆனால் இப்போது மயிலாக இருக்கும்போது எப்படி இருக்கிறான்?