தெய்வயானை திருமணம் முருகன் திருப்பரங்குன்றை அடைதல் திருச்செந்துரில் சிவலிங்கப் பிரதிஷ்டை பண்ணி இறைவனை வழிபட்ட பிறகு, முருகப் பெருமான் தன் பெரு வீரர்களுடன் திருப் பரங்குன்றம் வந்து சேர்ந்தான். இடையிலுள்ள ஐந்து நிலங்களையும் கடந்து மதுரைக்கு மேற்கேயுள்ள திருப்பரங்குன்றத்தை அடைக் தான். மதுரைக்கு மேற்கே திருப்பரங்குன்றம் இருப்பதாகக் கந்த புராணம் சொல்கிறது. இடனுறு குறிஞ்சியில் இனைய தன்மையால் நடவைகொள் பெரும்படை தடுவண் ஏகியே சுடர்பொழி வேலினான் தூய கூடலின் குடதிசை அமர்பரங் குன்றை எய்தினான். (திருப்பரங்குன்று. 22,) கடவைகொள் - நடந்த. கூடல் - மதுரை.] திருமுருகாற்றுப் படையிலும் மதுரைக்கு மேற்கே திருப்பரங் குன்றம் இருப்பதாகத்தான் உள்ளது. முதலில் அந்தப் பகுதி எல்லாம் குறிஞ்சி நிலமாக இருந்தது. மதுரை நகர் விரிந்து பரந்து விட்டது. இப்போது மதுரைக்கு மேற்கே திருப்பரங்குன்றம் இருப் பதாகச் சொல்ல முடியாது. நான்கு திசையிலும் மதுரை பரந்து வளர்ந்திருக்கிறது. இந்திரன் வேண்டுகோள் திருப்பரங்குன்றத்திற்குச் சென்ற முருகப் பெருமான் தேரைத் தச்சனை அழைத்து அங்கே ஒரு கோவிலை அமைக்கச் செய்தான். அப்போது இந்திரன் முருகப் பெருமானை. அணுகினான். தேவர்கள் முப்பத்து முக்கோடி பேர்களாக இருந்தும் போர்க்களத்தில் அவர் களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பூத கணங்களே போர் செய்தன. தேவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந் தார்கள். முடிவில், கை தட்டுவது போலப் பூமாரி பொழிந்தார்கள். எம்பெருமான் எங்களுக்கு எவ்வளவோ உதவி செய்திருக்கிறான். அவனுக்கு என்ன கைம்மாறு செய்வது?' என்று இந்திரன் யோசித் i
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/498
Appearance