உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கந்தவேள் கதையமுதம் ஆட்டினார். அந்த வேடர் திருமேனி கரிய நிறம் பொருந்தியது. அவர் கையில் வில் இருந்தது அவ்வாறே வில்லோடு சேர்ந்த மேகம் இங்கே நந்தியம் பெருவரைக்குத் திருமஞ்சனம் ஆட்டுகிறது. மேகத்திற்குக் கண்ணப்பநாயனாரையும், வானவில்லுக்கு அவர் கை வில்லையும் உவமையாக்கி, அவர் நம் வாய் நீரை இறைவனுக்கு அபிடேகம் செய்ததுபோல நந்தியம்பெருவரையில் மேகம் நீரைப் பொழிந்தது என்கிறார். பூட்டு கார்முகந் தன்னொடும் தோன்றிய புயல்வாய் ஊட்டு தண்புனல் நந்தியங் கிரிமிசை உகுத்தல் வேட்டு வக்குலத் திண்ணனார் மஞ்சனம் விமலற்கு ஆட்டு கின்றதோர் தனிச்செயல் போன்றுள தன்றே. (கார்முகம் - வில், புயல் - மேகம்.] (ஆற்றுப்படலம், G.) இங்கே கண்ணப்பர் என்று சொல்லவில்லை; திண்ணனார் என்று சொல்கிறார். கண்ணப்பர் என்றே சொல்லியிருக்கலாம். ஏன் திண்ணனார் என்று சொன்னார்? அதற்குக் காரணம் இருக்க வேண்டும். கண்ணப்பர் இறைவனுக்கு மஞ்சனம் ஆட்டும் போது திண்ணனாராகத்தான் இருந்தார். இறைவனுக்குத் தம் கண்ணையே பறித்து அப்பிய பிறகுதான் கண்ணப்பர் என்ற பெயர் வந்தது. காளத்தி மலையின்மேலே எழுந்தருளியுள்ள சிவபெருமா னிடத்தில் அன்பு கொண்டு அப்பெருமாளை வழிபடத் தலையிலே மலர் கொண்டு, வாயிலே நீர்கொண்டு, ஒரு கையில் வில்லும் மற்றொரு கையில் நிவேதனத்திற்குச் சுவை பார்த்து எடுத்து வந்த ஊனுமாக வந்து வழிபட்டு, திருமஞ்சனம் செய்தபொழுதெல்லாம் அவர் திண்ணனார் என்ற பெயரில்தான் இருந்தார். இங்கே நந்தி மலையில் மேகம் மழை பொழிவதற்கு, அவர் இறைவனுக்குத் திரு மஞ்சனம் செய்த நிலையை உவமானமாகச் சொல்ல வரும் ஆசிரியர் அந்த நிலையில் அவர் திண்ணனார் என்ற பெயருடனே இருந்தமை யால் அந்தப் பெயரைச் சொல்கினர். பக்தர்கள் இயற்கையாகக் காணுகின்ற காட்சிகளிலே கூட இறைவனைக் காண்பார்கள். நாம் இறைவனது கோவிலுக்குச் சென்றாலும் அங்கே வேறு எதையோ பார்ப்போம். அவரவர்களது மனோபாவத்திற்கு ஏற்றபடிதான் இந்த எண்ணங்கள் எழுகின்றன.