486 கந்தவேள் கதையமுதம் நம் ஊர்க் குரங்கு அப்படி இருக்குமா ? கைலாசத்தில் இருக்கும் குரங்கு ஆகையால் அந்த இடத்தின் சூழ்நிலையினால் அப்படி இருந்தது. நல்லவர்கள் இருக்கும் இடத்தில் பொல்லாதவர்கள் சேர்ந்தா லும் அவர்கள் மாறி நல்ல பழக்கங்கள் உடையவர்கள் ஆவார்கள். பொல்லாதவர்கள் ஆற்றல் உடையவர்களாக இருந்தால், அவர் களோடு சேருகிற நல்லவர்களும் கூடப் பொல்லாதவர்கள் ஆகிவிடு வார்கள். நல்ல பழக்கங்களும், நல்ல எண்ணமும், தெய்வீக ஆற்றலும் நிறைந்த பெரியவர்களிடத்தில் எவ்வளவு பொல்லாத வர்களாக இருந்தாலும் போய்ச் சேர்ந்தால் திருந்திவிடுவார்கள். திருவையாற்றுக் குரங்கு ஞானசம்பந்தப் பெருமான் சொல்கிற ஒரு பாட்டு இங்கே நினைவுக்கு வருகிறது. அவர் திருவையாற்றுக்குப் போய் அங்கே யுள்ள ஆண்டவனைப் பாடியிருக்கிறார். ஒரு பாட்டில் அங்கே உள்ள மந்திகளைப் பற்றிப் பாடுகிறார். மந்திகள் சுறுசுறுப்பாக இருக்கும். அங்கே பிராகாரத்தைச் சுற்றி மகளிர் நடமாடிக்கொண்டு வருகி றார்கள். அப்போது மிருதங்கம் வாசிக்கிறார்கள். அங்கே இருக் கின்ற மந்திகள் இதைப் பார்க்கின்றன. பெண்கள் ஆடுவதைப் பார்த்தபோது மயில்கள் ஆடுவது போலத் தோன்றுகிறது. முழவின் ஓசை இடி போல இருக்கிறது. மயில் ஆடுவதும், இடி இடிப்பதுமாக இருக்கும் நிலை மழை வருவதைக் காட்டும். தமக்கென்று பாது காப்புத் தேடிக் கொள்ளாத மந்திகள் இப்போது மயில் ஆடுகிறதே, இடி இடிக்கிறதே, மழை வந்துவிடுமோ என்று எண்ணி, பாதுகாப்புத் தேடிக்கொள்ள வேண்டுமே என்று மரத்தின் மேலேறி முகிலை அண்ணாந்து பார்க்கின்றனவாம். "புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட் டைம்மேல் உந்தி அலமந்த போதாக அஞ்சேலென் றருள்செய்வான் அமரும் கோயில், வலமனந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென் றஞ்சிச் சிலமந்தி அலமந்து மரமேறி முகில் பார்க்கும் திருவையாறே, "
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/506
Appearance