தெய்வயானை திருமணம் 491 மீபத்தில் இருந்து உங்களைத் தரிசனம் செய்யத் தவம் செய்திருக்க வேண்டும். இப்போது தவத்தின் பயனாக மேலான பதவியைக் கொடுக்கிறேன் என்று கீழே போகும்படி சொல்கிறீர்களே; நான் எவ்வாறு உய்வேன் ?" என்று அந்தக் குரங்கு சொல்லியது. று நுங்களை வைகலும் நோக்கி உவப்பாய் இங்குறை கின்ற திகந்து நிலம்போய் மங்குறு செல்வ வலைப்படு வேனேல் எங்கள் பிரான்பினை எங்ஙனம் உங்கேள். தெய்வயானை 30.) [வைகலும் - நாள்தோறும். இகந்து - நீங்கி, நிலம் - பூமி.] . நீ சுந்தரமூர்த்தி சுவாமிகளை எம்பெருமான், " நீ பூவுலகத்திற்குப் போய் வாழ்வாயாக" என்று சொன்னபோது அவர் இப்படித் தான் சொன்னார். அப்போது,"நான் அங்கே வந்து உன்னைத் தடுத்தாட்கொள்கிறேன்" என்று சிவபெருமான் சொல்லி அனுப்பிய தாகப் பெரிய புராணம் சொல்கிறது. மனிதனுடைய உள்ளத்தில் பல வகையான ஆசைகள் இருந் தாலும் அவற்றைப் பெண்கனாசை, பொன்னாசை, மண்ணாசை என்று மூன்று வகைக்குள் அடக்குவார்கள். மண்ணாசை அரசர்களுக்கு அதிகமாக இருக்கும். பெண்ணாசை பருவம் உள்ளவர்களுக்கே இருக்கும். பொன்னாசையோ எல்லோருக்கும் இருக்கும். அந்த ஆசை உடையவருக்கு இறைவனது அருள் எளிதில் கிடைக்காது. ஊசியின் காதில் ஒட்டகம் நுழைந்தாலும் நுழையும்; பணக்காரன் சொர்க்கத்திற்குப் போகமாட்டான்' என்று பைபிளில் ஒரு வாக்கியம் வருகிறது. பழைய காலத்தில் செல்வம் படைத்தவர்கள் அதனால் தமக்கு அகங்காரம் வரக்கூடாது என்று அதை அறத்திற்குப் பயன்படுத்து வார்கள். தாம் பெற்றதைப் பலருக்கும் பகிர்ந்து கொடுத்து அதனால் எல்லோருக்கும் இன்பம் செய்வதே இந்த நாட்டுத் தர்மம். அதை ஒரு வகையில் சமதர்மம் என்று சொல்ல வேண்டும். "செல்வத்துப் பயனே ஈதல்" என்பது சங்க நூல். "இரப்பவர்க் தீய வைத்தார் ஈபவர்க் கருளும் வைத்தார்" என்று சொல்வார் காவுக்கரசர்,
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/511
Appearance