உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தக்க யாக சங்காரம் சயந்தன் விளவுதல் தேவலோகத்தில் எல்லோரும் இந்திரனுக்கு முடி சூட்டியபின் மகிழ்ச்சியோடு அமர்ந்திருந்தார்கள். அப்போது இந்திரனுடைய மகன் சயந்தன் பிரகஸ்பதி பாவானிடம் ஒரு கேள்வி கேட்க ஆரம்பித்தான். "தக்கன் வேள்வி செய்தான். பரமேசுவரனை அழைக்காமல் மற்றத் தேவர்களை அழைத்தான். அந்த யாகத்தில் அளிக்கப்பட்ட அவியைத் தேவர்கள் நுகர்ந்தார்கள். அதனால்தான் அவர்களுக்குச் சூரபன்மாவினாலே துன்பம் ஏற்பட்டது என்று சொல்கிறார்களே ; அந்த வரலாறு யாது? எனக்குக் கூற வேண்டும்' என்று கேட்டான். அந்த வரலாற்றைப் பிரகஸ்பதி கூற ஆரம் பித்தார். அந்தப் பகுதி, அதனோடு தொடர்புடைய செய்திகள் யாவும் தனியாக, 'தக்க காண்டம் என்ற பெயருடன் கந்த புராணத்தில் இருக்கின்றன. அந்தப் பகுதியில் சிவபெருமானுடைய பெருமைகள் பலபடியாக வருகின்றன. அவனுடைய வீரச் செயல்களும், திரு விளையாடல்களும் அங்கே விரிவாக உள்ளன. தக்கனுடைய வர லாற்றைப் பிரகஸ்பதி கூற ஆரம்பித்தார். தக்கன் தவம் செய்தல் பிரம்மாவுக்குப் பத்துப் பிள்ளைகள். அவர்களைப் பிரம்மாவைப் போலவே பிரஜாபதி என்று சொல்வார்கள். அவர்களில் ஒருவன் தக்கப் பிரஜாபதி. அவன் தவம் செய்தபோது சிவபெருமான் தோன்றி, "உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டான். தன்னை வருத்திக்கொண்டு பிறருக்குத் துன்பம் செய்யாமல் இருப்பது எதுவோ அதுதான் உயர்ந்த தவம். தவம் என்றும் நற்றவம் என்றும் இரண்டு உண்டு. தவம் செய்வார்க்கிடம், நற்றவம்செய் வார்க்கிடம்" என்று சிந்தாமணியில் வருகிறது. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகச் செய்வது நல்ல தவம். ஏதேனும்