உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

606 கந்தவேள் கதையமுதம் நீள்நி லப்பெரு வைப்பும் நிகர் இலா வீணை வல்லவர் ஏனையர் மேவிய சேணும் மால்அயன் ஊரும் திசையும் என் ணை செல்ல அளித்தருள் செய்தியால். உன்னை வந்து வழுத்தும் உயிர்எலாம் எண்னை வந்து வழுத்தவும் யான் இனி நின்னை யன்றிநெஞ் சாலும் பிறர்தமைப் பின்னை வந்தியாப் பெற்றியும் ஈதியால். (தக்கன் தவம் செய்.11,12.) [வீணைவல்லவர் - கந்தருவர். சேணும் - தேவலோகமும்.] 44 அதோடு மற்றொரு வரத்தையும் கேட்டான்; எல்லாவற்றையும் ஈந்து அருளுகின்ற தாயாகிய எம்பெருமாட்டி உன் சரீரத்தில் பாதியாக இருக்கிறாள். அந்தப் பராசக்தி என்னுடைய மகளாகத் தோன்ற வேண்டும். நீ மறையவனாக வந்து அவளைத் திருமணம் நீ செய்து கொள்ள வேண்டும் " என்று கேட்டான். ஆதி யாகி ஆனைத்தையும் ஈன்றநின் மாதி யான பராபரை யான்பெறும் மாத ராசு மறையவன் ஆகிறீ காத லாகக் கடிமணம் செய்தியால், (தக்கன் தவம் செய். 14.) அம்பிகை எல்லோருக்கும் தாய். அம்பிகை என்ற பெயரே அதைத்தான் காட்டுகிறது. எல்லாத் தத்துவங்களுக்கும் மேலான சக்தி அவள். அந்தப் பெருமாட்டி யிடமிருந்துதான் உலகங்கள் எல்லாம் தோன்றுகின்றன. இறைவனுடைய அருளே அந்த உலகத்திலுள்ள வடிவம். நன்மை கூட்டங்களுக்கு செய்ய வேண்டுமென்று அருள் பாலிக்கின்ற பெருமாட்டி அந்தத் தாய். உயிர்க் தக்கன் அகங்காரத்தினாலே கேட்டான்; "எல்லா உலகத்தையும் ஈன்ற தாய் என்னுடைய மகளாக வரவேண்டும் என்று கேட்டான். எல்லா உலகத்தையும் ஈன்ற தாயை நான் பெறுகின்ற பேறு எனக்குக் கிடைக்க வேண்டும்' என்று கேட்டிருந்தால் அவன் பணிவு நன்றாகத் தெரியும். ஆனால் இங்கே, "எல்லாவற்றையும் ஈன்ற பரா சக்தி நான் பெறும் மகளாக இருக்கவேண்டும்" என்று சொல்கிறான்.