558 கந்தவேள் கதையமுதம் உள்ளத்தில் அச்சம் உண்டாயிற்று. இதுவரைக்கும் நிகழ்ந்த நிகழ்ச் சிகளை நினைத்தாள். நிச்சயமாக இவன் முருகனாகத்தான் இருக்க முடியும் என்ற உறுதியான புத்தி வந்தது. அந்த யானையோ காட்டில் இல்லாத புதிய யானையாகத் தோன்றியது. வள்ளி முருகனைத் தழுவுதல் 'உயிருக்கு மோசம் வந்துவிடுமோ?' என்ற அச்சம் அவளுக்கு உண்டாயிற்று. உடனே முருகப் பெருமானிடம் சென்று, " என்ளை இந்த யானையிடமிருந்து காத்தருள வேண்டும். நீர் சொன்னபடி செய்வேன்" என்று ஒரு பக்கத்தில் தழுவிக் கொண்டாள். அவ்வேலை யில்வள்ளி, அச்சமொடு மீண்டுதவப் பொய்வேடம் கொண்டுநின்ற பூங்கவன்றன் பால்அணுகி இவ்வேழம் காத்தருள்க, எந்தைநீர் சொற்றபடி செய்வேன், எனஒருபால், சேர்ந்துதழீஇக் கொண்டனளே. (வள்ளியம்மை. 113.) [அவ்வேலையில் - அந்த வேளையில். புங்கவன் - தேவன் : முருகன்.] எந்தை என்பதற்கு என் தந்தை என்று பொருள். "உங்களை என் தந்தையாகப் பாவித்துத் தழுவிக் கொள்கிறேன்" என்ற கருத்து அதனால் தெரியவருகிறது. முருகப் பெருமானை ஒரு பக்கம் வள்ளி வந்து முட்டினாள். கணபதி மற்றொரு பக்கம் முட்டினான். வள்ளிநாயகியினுடைய பயம் இப்போது போய்விட்டது. கணபதியைப் பார்த்து முருகன் வணங்கி, விடைகொடுக்க அவர் மறைந்துவிட்டார். பயபக்தி இங்கே ஒரு கருத்தை நாம் நினைக்க வேண்டும். வள்ளி நாயகிக்கு முருகப் பெருமானிடத்தில் முதிர்ந்த அன்பு இருந்தது. ஆனாலும் தன் முன்னால் வந்த வேடன் அவன்தான் என்று தெரிந்து கொள்ளவில்லை. அவன் வேங்கை மரமானபோது அவன் சாமான்ய வேடன் அல்ல என்று தோன்றியிருக்கும். மீண்டும் கிழ உருவத்தில் வந்தபோதும் அவள் உள்ளத்தில் ஐயம் தோன்றி முகிழித்திருக்கும். யாரோ தெய்வந்தான் இப்படி வந்து விளையாடல் புரிகிறது என்று
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/579
Appearance