560 கந்தவேள் கதையமுதம் முருகன் தன் உருவம் காட்டுதல் முருகன் தன்னுடைய திருவுருவத்தை அப்போது காட்டினான். முந்நான்கு தோளும் முகங்கள்ஓர் மூவிரண்டும் கொன்னார்வை வேலும், குலிசமும்ஏ னைப்படையும், பொன்னார் மணிமயிலு மாகப் புனக்குறவர் மின்னாள்கண் காண, வெளிநின் றனன்விறலோன். (வள்ளியம்மை. 116.) (மிகாள் ஆர் வை வேலும் - பெருமையும் கூர்மையும் உடைய வேலாயுதமும். குலிசம் - வச்சிராயுதம். ஏனைப்படையும் - மற்றப் படைக்கலன்களும்.] பன்னிரண்டு திருத்தோள்களும், ஆறு திருமுகங்களும், கையில் வேலாயுதமும், வச்சிராயுதமும், மற்ற ஆயுதங்களும், மயில் வாகனமு மாக வள்ளிநாயகியின் கண் காண, வெளிப்படையாகத் தன்னுடைய திருவுருவத்தைக் காட்டி நின்றான் முருகன், முந்தான்கு தோளும் என இந்தப் பாட்டில் எடுத்தவுடன் பன்னிரண்டு தோள்களைச் சொல்கிறார். தோள் வீரத்தின் இருப்பிடம்; புயவலி என்றும் புஜபலபராக்கிரமம் என்றும் சொல்வார்கள். வீரத்தைக் கண்டால் பெண்களுக்குக் காதல் பிறக்கும். பெண்களுக்கு ஆண்களின் தோளிலே ஆசை. ' செம்மனத்தான்,தண்ணளியான், செங்கோலான், மங்கையர்கள் தம்மனத்தை வாங்கும் தடந்தோளான் "" என்பது நள வெண்பா. ஆகவே, முகங்களை முன்னால் சொல்லாமல் தோள்களைச் சொன்னார். வீரத்தைத் தோள்கள் காட்டின. கையி லுள்ள படைகள் காட்டின. ஆர்வத்தோடு தழுவிக் கொண்ட வள்ளி நாயகிக்கு, வீரத்தோடு இருந்த முருகன் பற்றுக்கோடாக நின்றான். வள்ளி நாயகி இரங்கல் இப்போது வள்ளிநாயகிக்கு, வந்தவன் முருகன் என்பது தெள்ளத் தெளிவாகப் புலனாயிற்று. ' இதுவரைக்கும் இந்தப் பெரு மானை அலட்சியமாகப் பேசிவிட்டோமே! அறிந்து கொள்ளாமல் சிந்தனையற்று இருந்துவிட்டோமே!' என்று உள்ளம் வருந்தியது. "மின்னலைப்போல ஒளிவிடுகின்ற வேற்படையைக் கையிலுள்ள முருகப் பெருமானே, இந்தத் திருவுருவத்தை முன்னாலே காட்டி
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/581
Appearance