நாடும் நகரமும் 39 வேறு ஒரு செய்தியை இங்கே சொல்ல விரும்புகிறேன். நம் நாட்டில் பல தலங்கள் இருக்கின்றன. அவற்றிற்குப் புராணங்களும் இருக்கின்றன. நாகம் பூசை பண்ணின இடம் நாகப்பட்டினம். வண்டு பூசை பண்ணின இடம் வண்டூர், குரங்கு பூசை பண்ணின இடம் குரங்காடுதுறை. இப்படிப் பல தலங்கள் இருக்கின்றன. என்னை ஒருவர் கேட்டார்; "இந்தத் தலபுராணங்களில் உள்ள நிகழ்ச்சிகள் உண்மையாக இருக்குமா? குரங்கு பூசை பண்ணியதை யாராவது கண்டு படம் எடுத்திருக்கிறார்களா? அதனை மெய்ப்பிக்க ஏதாவது தடையம் உண்டா?" என்று கேட்டார். "அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. அந்தப் புராணங்களினால் பயன் உண்டு' என்று சொன்னேன். "என்ன பயன் ?" என்று கேட்டார். "நீங்கள் நாவல்களையும் சிறு கதைகளையும், படிக்கிறீர்களே. அவை எல்லாம் பொய் அல்லவா? எதற்காகப் படிக்கிறீர்கள்?" என்று அவரைக் கேட்டேன். "அந்தக் கதைகளில் கருத்து இருக்கிறது. அந்தக் கருத்துக்காகப் படிக்கிறோம்" என்று சொன்னார். அது போல் புராணங்களினாலும் ஒரு பயன் உண்டு: கருத்து உண்டு" என்று சொன்னேன். "என்ன பயன் ?" என்று கேட்டார். நான் விடையிறுத்தேன். இறைவன் இல்லாத இடம் எதுவும் இல்லை. 'பார்க்குமிடம் எங்குமொரு நீக்கமற நிறைகின்ற பெருமான்' அவன். அவன் எங்கும் உறைகின்றான் என்ற எண்ணம் நமக்கு இருப்பதில்லை. அப்படி இருந்தால் தவறே செய்யமாட்டோம். "எங்கும் உளன்ஒருவன் காணுங்கொல் என்றஞ்சி அங்கம் குலைவ தறிவு' 12 என்று குமரகுருபரர் சொல்லியிருக்கிறார். (நீதிநெறி விளக்கம்} எல்லாவற்றையும் இறைவனாகப் பார்க்கும் பக்குவம் நமக்கு இல்லை. ஆனால் நாம் பார்க்கும் பொருள்களின் மூலமாக ஆண்டவ னுடைய நினைவு உண்டாக வழியிருந்தால் அவனை மறக்காமல் இருக்கலாம்.நாம் காணும் பொருள்கள் என்ன ? எறும்பு, குரங்கு, மாடு - இப்படி உள்ளவற்றையே பார்க்கிறோம். அவை பூசித்த தலங்களைப் பற்றிய கதைகளைப் படித்திருந்தால் அவற்றைக் காணும் போது அந்தக் கதைகள் நினைவுக்கு வரும்; இறைவனுடைய நினைவும்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/59
Appearance