வள்ளியம்மை திருமணம் 569 தெளிவு உண்டாயிற்று. அவளை அறியாமல் காதல் மலர ஆரம் பித்தது. உயிருக்கு மோசம் வருமென்று அறிந்தபோது அவளே அவனை அணைத்துக் கொண்டாள். பிறகு தெய்வக் கோலம் கொண் டாள். அவளை ஆண்டவன் மணந்து கொண்டான். இதுதான் வள்ளி திருமணத்தின் சுருக்கம். இதன் உள்ளுறை பொருள் என்ன? ஐ.யிர்க் கூட்டங்களைப் பசுக்கள் என்பார்கள். பசுவானது பதியை அடைந்தால் இன்பத்தைப் பெறலாம். இந்த உலகத்தில் உடம்போடு வாழ்கின்ற எல்லா உயிர்களும், இந்த உலக வாழ்க் கையே சாசுவதம் என்று எண்ணி, இந்த உடம்புதான் நமக்கு உரியது என்று ஏமாந்து நிற்கின்றன ; சார்ந்ததன் வண்ணமாக இருக்கின்றன. ஐந்து பொறிகளாகிய வேடர்களிடையே அல்லற் படுகின்றன உயிர்கள். இந்த உலகந்தான் காடு. மரங்களைப் போல மக்கள் இருக்கிறார்கள். புலி, சிங்கம் முதலிய விலங்குகளைப் போன்ற இயல்புடைய மனிதக் கூட்டமும் உலகத்தில் நடமாடுகிறது. ஆணவம் என்னும் யானை திரிந்துகொண்டிருக்கிறது. எங்கும் அறியாமையாகிய இருள் படர்ந்திருக்கிறது. இதனிடையே ஆன்மா வாகிய வள்ளி புலன்களிடையே மயங்கி, அவற்றுக்கு வேண்டிய காரியங்களைச் செய்துகொண்டே இருக்கிறாள். சிறிய தானியமாகிய தினை சிற்றின்பத்திற்கு அடையாளம். சிற்றின்பத்தைப் பெரிதாகக் கருதி, வேறு யாரும் அதில் பங்குகொள்ள வராதபடி காவல் காத்து நிற்கிறது உயிர். இப்படிப் பூமியில் சிற்றின்பத்தையே நிலையெனக் கருதி வாழ்த்துகொண்டிருக்கிற ஆன்மாவை ஆட்கொள்ள இறைவன் குருநாதனாக வருகிறான். தன் சுய வடிவத்தைக் காட்டாமல் மனிதனைப் போலத்தான் வருவான். அதைக் கண்டு நாம் ஏமாந்து போகக்கூடாது. அருபரத்து ஒருவன் அவனியில் வந்து குருபரன் ஆகி அருளிய பெருமையைச் சிறுமை என்று இகழாதே" என்று கூறுவார் மாணிக்கவாசகர். முருகப் பெருமான் வள்ளி நாயகியை ஆட்கொள்ள வேண்டு மென்று வந்தவன், அவளைச் சோதனை செய்தான். குருநாதர் தம் 72
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/590
Appearance