பார்வதியின் தவம் 47 ஆங்கவட் கண்டு வெற்பன் அடியனேன் பொருட்டால் அம்மை நீங்கிளன் போலும் முக்கண் நிருமலன் றன்னை என்னா ஏங்கினன்; தனது நோன்புக் கிரங்கினன்; இவைகள் ஈசன் ஓங்குபே ரருளே என்ன உவகையங் கடலுட் பட்டான். (பார்ப்பதிப் படலம், 22.) அம்பிகை பெரும் கருணை உடையவள். எப்போதும் இறை வனோடு ஒன்றுபட்டிருக்கிற சேர்க்கையை விட்டுவிட்டு இமாசல அரசனுக்கு அனுக்கிரகம் பண்ணுவதற்காக எழுந்தருளினாள். உண்மையான அன்பு உடையவர்கள் தமக்கு ஏதாவது துன்பம் வந்தாலும் அதனைப் பொறுத்துக் கொண்டு, தம் அன்புக்குரியவர் களுக்கு அருள் பாவிப்பார்கள். அம்பிகையின் செயல் இந்த உண்மையை நமக்குத் தெரிவிக்கிறது. இமாசல ராஜன் குழந்தையை எடுத்து மேனையிடத்தில் அளிக்க, அவள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து அதனை வாங்கிக் கொண்டாள். அன்னையின் கருணை குழந்தை இனிதாக வளர்ந்தது. கச்சியப்ப சிவாசாரியார் ஓர் அரிய கருத்தைச் சொல்கிறார். அம்பிகை உலகத்திலுள்ள எல்லா உயிர்களையும் தோற்றுவித்து, அவற்றுக்கு வேண்டிய தனுகரண புவன போகங்களைத் தருகிறாள். அம்பிகை உயிரைப் படைப்பது இல்லை. உயிர்கள் நித்தியமானவை. இறைவன் எப்படி நித்திய மானவனோ அப்படி உயிர்களும் நித்தியமானவை. உயிர் படைக்கப் பட்ட பொருள் அல்ல. ஆனால் உயிர்கள் உலகத்தில் வாழ வேண்டு மானால் சரீரம் வேண்டும். பிறவி தோறும் பண்ணுகின்ற புண்ணிய பாவங்களை அனுபவிப்பதற்குச் சரீரம் இருத்தல் அவசியம். அந்தச் சரீரம் வாழ்வதற்குப் பூமி வேண்டும். இந்தச் சரீரத்திலே பல வகை யான பொறிகள் இருக்கின்றன; புறக் கரணங்கள், அகக் கரணங்கள் இருக்கின்றன, கை,கால் முதலியன புறக் கரணங்கள். மனம்,புத்தி,சித்தம், அகங்காரம் ஆகியவை அகக் கரணங்கள். இவை எல்லாம் இருந்தாலும் உயிர்கள் வந்து அநுபவிப்பதற்குரிய போகபோக்கியங்கள் வேண்டும். உயிர் மாத்திரம் இருந்தால் போதாது. ஆகவே அதற்காக, தனு, கரணம், புவனம், போகம் என் பனவற்றை எம்பெருமாட்டி படைக்கிறாள். இந்த நான்கையும்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/67
Appearance