66 கந்தவேள் கதையமுதம் பார்த்தவுடன் எம்பெருமானது நெற்றிக் கண் காமனை எரித்து விட்டது. கைலாயம் முழுவதும் புகை சூழ்ந்து பரவியது. மாரனும் குமாரனும் கந்தபுராணத்தில் வரும் கதைகளுக்கு உள்ளுறை உண்டு. அதைச் சற்றுக் கவனிக்க வேண்டும். சிவபெருமானுடைய ஞானக் கண்ணிலிருந்து முருகப்பெருமான் திரு அவதாரம் செய்யப் போகி றான். அந்த நெற்றிக் கண்ணே இப்போது காமனைச் சுட்டது. யாரேனும் பெரிய அதிகாரிகள் நமது பேட்டைக்கு வந்தால் அன்றைக்கு நமது பேட்டையை முனிசிபல் அதிகாரிகள் சுத்தம் செய்வார்கள். மந்திரி வரப்போகிறார் என்றால் சாலைகளை எல்லாம் சுத்தம் செய்து வைத்திருப்பார்கள். இங்கே குமார ராஜா வரப் போகிறார். அதற்கு முன்பு வழியிலுள்ள அழுக்கெல்லாம் போன மாதிரி மாரன் அழிந்தான். ஞானமூர்த்தியாகிய குமாரன் வருவதற்கு முன்பு மயக்கத்தை உண்டாக்குகின்ற மாரன் அழிந்து விட்டான். குமாரனுக்கு முன்னாலே மாரன் தோற்றம் அளிக்க முடியாது. மாரனு டைய சமாதியின்மேலே குமாரனுடைய தொட்டில் இருக்கிறது. குமாரன் என்ற சொல்லுக்கே மாரனைக் குற்சிதம் செய்பவன் என்று பொருள். சூரியன் உதயம் ஆவதற்கு முன்னாலே இருள் போனது போல ஞான சூரியன் ஆகிய முருகன் திரு அவதாரம் செய்வதற்கு முன்னாலே காமத்தை உண்டாக்கும் மாரன் அழிந்தான். முருகப்பெருமானை நினைக்கின்றவர்களுக்குக் காமனால் உண்டாகிற மயல் தோன்றாது. அருணகிரியார் இந்த உண்மையைச் சொல்கிறார். "நான் ஒரு பெரிய கடலைத் தாண்டிவிட்டேன் என்கிறார். "எவ்வாறு தாண்டினீர்கள்?" என்று கேட்டால், "மனே திடத்தினால் தாண்டினேன் " என்கிறார். " முருகப்பெருமானுடைய திருவருளினால் மனோதிடம் என்ற புணையைப் பெற்றேன். அதனால் காமம் என்னும் சமுத்திரத்தைத் தாண்டினேன் என்கிறார். 44 "கடத்தில் குறத்தி பிரான் அரு ளால்கலங் காதசித்தத் திடத்தில் புணையென யான்கடந் தேன்சித்ர மாதரல்குந் படத்தில் கழுத்தில் பழுத்தசெவ் வாயில் பணையில்உந்தித் தடத்தில் தனத்தில் கிடக்கும்வெங் காம சமுத்திரமே." [கடத்தில் - காட்டில் வாழ்ந்த புணையென - தெப்பத்தைப் போல். புனையில் மூங்கிலைப் போன்ற தோள்களில்)
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/86
Appearance