பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவகுஞ்சரி திருமணம்

நீள் இன்பக் கடலில் கிளேப்பாராயினர். அது போது கூட wம் ஊடலும் இனிதின் நிகழந்தன.

இவ்வாறு ஊடியும் கூடியும் புனலில் மூழ்கிய தம்பதி கள் சோலையில்உள்ள இருக்கைகளில்அமர்ந்தனர்.கணவன் மார்கள் நல்ல மண முள்ள மலர்களைப் பறித்து வந்து, தம் தம் மனைவியர் கூந்தலில் சூட்டிக் கொள்ளுமாறு வேண்டி நின்றனர். அப்படி வேண்டிய காதலர்களில் ஒருவன், மலர் களைக் கொய்து வந்து 'மாதர்களில் அரசியாய் இருப்ப வளே' என்று மிகுந்த காதல் உணர்ச்சியோடு தன் காதலி யினை விளித்தனன். அவன், மாதர்களில் அரசியாய் இருப் பவளே எனப் பன்மையில் கூறியதால் தன்இனப் போலப் பல மாதர்கள் தன் கணவனுக்கு உண்டு போலும் என்று எண்ணிக் கொண்டு கோபம் கொண்டு இருக்கை விட்டு எழுந்து போயினள். இந்தக் காட்சியினைக் கவி

மின்னர் தமக்கோர் அரசேவெறி வேங்கை வீயும் புன்கை வீயும் கொணர்ந்தேன்புனை கிற்றி என்ன மன்ன உனக்குப் பலருண்டுகொல் மாதர் என்ன க் தன்னுவி, அன்ன்ை தனைச்சிறியொர் தையல் போளுள்

என்று பாடிப் பரவசமுற்றனர். இந்த முறையில் திருப் பரங்குன்றத்தில் யாவரும் இன்பமுற்றிருந்தனர். முருகப் பெருமான் தெய்வயானையை மணமுடிக்கும் சடங்கு தொடங்கப்பட்டது. எல்லாச் சடங்குகளும் முடிந்த பின் இந்திரன் தன் மகளாகிய தெய்வ யானையை முருகன் திருக் கரத்தில் பிடித்துக் கொடுத்துக் கன்னிகாதானம் செய் தனன். உடனே முருகப் பெருமான்,

மங்கல நாணை மணிக்கனம் ஆர்த்து நங்கை முடிக்கொர் நறுந்தொடை சூழ்ந்தான் என்னியங்கள் ஒலித்தன. யாவரும் களித்தனர் முருகப்