பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சஷ்டி விரதம்

வளைபட் டகைம்மா தொடுமக் களெனும் தளைபட் டழியத் தகுமோ தகுமோ கிளைபட் டெழுசூர் உரமும் கிரியும் தொளைபட் டுருவத் தொடுவே லவனே

மெய்யன்பர்களே!

இன்று பேசப்படும் பொருள் சஷ்டி விரதம் என்னும் பொருளைப்பற்றியாகும். கந்தர் சஷ்டியாகிய இந்த நாளில், கந்த சஷ்டியைப் பற்றிப் பேசுவது மிக மிகப் பொருத்தமே ஆகும்.

தெய்வங்களின் திருவருளே மக்கள் பெற வேண்டிய வழிகள் பலவற்றுள் அவ்வத் தெய்வங்களுக்குகந்த விரதங் களை மேற் கொள்வதுமொன்றகும். முழு முதற் பரம்பொரு ளாம் கண்ணுதற் பெருமான் திருவருளேப் பெற வேண்டி ல்ை சோமவார விரதத்தையும் சிவராத்திரி விரதத்தையும் மேற் கொள்ளலாம், தேவியின் திருவருளைப் பெற நவராத் திரிப்பூசையையும், விஞயகப் பெருமான் திருவருளை நாடி ல்ை, வினயக சதுர்த்தியையும் திருமால் திருவருளைப் பெற லட்சுமி நாராயணன் விரதத்தையும் மேற் கொள்ள லாம். இப்படியே முருகன் திருவருளைப் பெறுதற்கு வெள்ளிக் கிழமை விரதம், கார்த்திகை விரதம், சஷ்டி விரதம் ஆகிய வற்றை மேற்கொள்ளுதல் வேண்டும்.