பக்கம்:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பாகவதர் சொல்கிறார்:
பகவான் ஒருவன்தான் புருஷன்;
மற்றவர்கள் பெண்கள்.

நான் சொல்கிறேன்:
நீ ஒருத்திதான் பெண்;
மற்றவர்கள்.....

ஒரு தரமல்ல
மூன்று தரம் சொல்கிறேன்:

என் மாதவிக் கொடியே!
நீ ஒருத்திதான்
பெண் ! பெண்! பெண் !

 

19

33